IPL 2022 : அஷ்வினை தவறவிட்ட சி.எஸ்.கே – வெறும் 5 கோடிக்கு தட்டி தூக்கிய அணி – எது தெரியுமா?

Ashwin
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் தற்போது பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பிசிசிஐ அறிவித்தபடி இன்று 590 வீரர்கள் கொண்ட பட்டியலுடன் இந்த ஏலமானது துவங்கியுள்ளது. இந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு தேர்வு செய்து வருகின்றன.

Ashwin 2

- Advertisement -

தற்போது இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு கோடி ரூபாய் என்ற வரம்பில் தங்களது பெயர்களை பதிவு செய்த வீரர்களின் ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு டெல்லி அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் தனது பெயரை இரண்டு கோடி ரூபாய் அடிப்படை விலையில் பதிவு செய்திருந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக அவர் தேர்வு செய்யப்பட்ட போது சுமார் 7 கோடியே 60 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். இந்நிலையில் இந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அவர் 5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்க பட்டுள்ளார் நிச்சயம் இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

rajasthan royals
Rajasthan Royals IPL

ஏனெனில் ஐபிஎல் வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்து விளையாடி வரும் அஸ்வின் சென்னை, புனே, பஞ்சாப், டெல்லி என பல அணிகளுக்காக விளையாடி உள்ளார். அதுமட்டுமின்றி 177 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் அவரை 5 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வாங்கியுள்ளது ராஜஸ்தான் அணியின் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சரியான சுழற்பந்துவீச்சாளர் இல்லாமல் தவிக்கும் ராஜஸ்தான் அணி சீனியர் வீரரான அஸ்வினை தட்டித் தூக்கி உள்ளதால் அவரை பிங்க் நிற ஜெர்ஸியில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : எனக்கு ஜெயிக்குறது மட்டும் தான் முக்கியம். இந்த விஷயம் ஒன்னும் பெருசில்ல – கெத்தாக பேசிய ரோஹித் சர்மா

இந்தாண்டு எப்படியும் அஷ்வினை சிறய தொகையாக இருந்தாலும் சி.எஸ்.கே அணி தேர்வு செய்து விடும் என்று ரசிகர்கள் எதிர்பாத்த வேளையில் அவரை சி.எஸ்.கே அணி ஏலத்தில் பெரிய அளவில் கவனத்தை அளிக்காமல் தவறவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement