தோனிக்காக இந்த வருஷம் நான் இதை செய்ய ஆசைப்படுகிறேன் – மனம்திறந்த சுரேஷ் ரெய்னா

Raina
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரர்களான தோனி மற்றும் ரெய்னா ஆகியோர் இருவரும் இந்திய அணிக்கும், சிஎஸ்கே அணிக்காகவும் ஒன்றாக பல போட்டிகளில் விளையாடி உள்ளனர். அவர்களுக்கு இடையே உள்ள நட்பு எவ்வளவு ஆழமானது என்பது நாம் அறிந்ததே. அதனை பறைசாற்றும் வகையில் கடந்த ஆண்டு ஒரே நாளில் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தற்போதுவரை சிஎஸ்கே அணிக்காக ஒன்றாக இணைந்து விளையாடி வருகின்றனர்.

Raina 3

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை தோனிக்காக வெல்ல வேண்டும் என்று தனது விருப்பத்தினை சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் : தோனியும் நானும் இந்திய அணிக்காகவும், சிஎஸ்கே அணிக்காகவும் நிறைய போட்டிகளில் பங்கேற்று இருக்கிறோம்.

அவருடன் நான் கிட்டத்தட்ட 200 போட்டிகளுக்கு மேல் விளையாடி இருப்பேன். அவர் மீது எனக்கு நல்ல மரியாதை உள்ளது. அதே போன்று அவரும் என்மீது அன்பு வைத்திருக்கிறார். தோனி எனக்கு மூத்த சகோதரரை போன்றவர் என்று சுரேஷ் ரெய்னா குறிப்பிட்டார். அது மட்டுமின்றி பல போட்டிகளை நாங்கள் ஒன்றாக வென்று இருக்கிறோம், அதேபோன்று தோற்று இருக்கிறோம்.

raina

ஆனால் இம்முறை இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை சிஎஸ்கே அணி கண்டிப்பாக ஜெயித்தே ஆக வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பமாக இருக்கிறது. மேலும் இந்த வெற்றியை தோனிக்கு பரிசாக அளிக்க வேண்டும் எனவும் சுரேஷ்ரெய்னா குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரும் சிஎஸ்கே 2010, 11, 18 ஆகிய ஆண்டுகளில் ஒன்றாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

raina 1

அதுமட்டுமின்றி ஏற்கனவே சமீபத்தில் ரெய்னா அளித்திருந்த பேட்டியில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை வெற்றி பெற்றால் நிச்சயம் நான் தோனியை சமாதானம் செய்து அடுத்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட வைப்பேன் என்று கூறியிருந்தார். ஏற்கனவே 40 வயதான தோனி இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement