ஐ.பி.எல் தொடரில் தான் இடம்கிடைக்கல. எனக்கு இந்த பர்மிஷனாவது கொடுங்க – பி.சி.சி.ஐ யிடம் ரெய்னா கோரிக்கை

Raina
Advertisement

இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி உடன் சேர்ந்து ஓய்வை அறிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வந்த அவர் சென்னை அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் இருந்தார். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் ரெய்னா இடம் பெற்று இருந்தாலும் சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய வேளையில் பென்ச்சில் அமர வைக்கப்பட்டார்.

Raina

அதனை தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் அவர் தனது பெயரை பதிவு செய்தும் சென்னை அணி அவரை கண்டுகொள்ளவில்லை. அதே போன்று மற்ற எந்த அணிகளும் அவரை அடிப்படையான இரண்டு கோடிக்கு ஏலம் எடுக்காததால் அவர் இந்த தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே சுரேஷ் ரெய்னா இந்தி வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார்.

- Advertisement -

சுரேஷ் ரெய்னா இல்லாத ஐபிஎல் தொடர் ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்தது. இந்நிலையில் தான் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட ஆசைப்படுகிறேன் என்று வெளிப்படையாக ஏற்கனவே ரெய்னா தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது பி.சி.சி.யிடம் தற்போது ரெய்னா முக்கிய கோரிக்கை ஒன்றினை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பி.சி.சி.ஐயுடன் ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்கள் ஐபிஎல் தொடரிலும் ஏலம் எடுக்கப்படா விட்டால் அவர்களுக்கு வருமானம் இல்லை.

Raina-1

இதன் காரணமாக வெளிநாட்டு தொடர்களில் எங்களை போன்ற வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் பிசிசிஐ இந்திய அணியுடன் இருந்த வீரர்களை வெளிநாட்டு தொடர்களில் விளையாட அனுமதிக்காது. ஆனால் தற்போது ஓய்வு பெற்ற பிறகு ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்கள் அயல்நாட்டு தொடர்களில் விளையாடினால் மீண்டும் பார்முக்கு திரும்புவார்கள்.

- Advertisement -

எனவே குறைந்தது இரண்டு வெளிநாட்டு தொடரிலாவது இந்திய அணியில் இடம்பெறாத வீரர்களை விளையாட அனுமதி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இது குறித்து பேசியுள்ள அவர் : பொதுவாகவே வெளிநாட்டு வீரர்கள் பார்மில் இல்லாதபோது இந்தியா வந்து ஐபிஎல் போட்டியில் விளையாடி பார்முக்கு திரும்புகின்றனர். அதேபோன்று இந்திய வீரர்களும் நல்ல ஆட்டத்திற்கு திரும்ப வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரின் மூலம் ஹார்திக் பாண்டியாவிற்கு அடித்த ஜாக்பாட் – இதை அவரே எதிர்பார்த்து இருக்க மாட்டாரு

அப்படி நாங்கள் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்கும் போது நல்ல பார்ம் கிடைத்து மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் பி.சி.சி.ஐ யின் விதிமுறைப்படி எந்த ஒரு இந்திய வீரரும் அயல்நாட்டு தொடர்களில் விளையாடக்கூடாது என்பது பல ஆண்டுகாலமாக எழுதப்படாத ஒரு விதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement