ஐ.பி.எல் தொடரின் மூலம் ஹார்திக் பாண்டியாவிற்கு அடித்த ஜாக்பாட் – இதை அவரே எதிர்பார்த்து இருக்க மாட்டாரு

Pandya
Advertisement

இந்திய அணியின் இளம் முன்னணி ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீசாமல் இருந்து வந்தார். இதன் காரணமாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பாண்டியா மீண்டும் தான் எப்போது பந்துவீசும் அளவிற்கு தயாராகி வருகிறேனோ அப்போது இந்திய அணியில் இணைகிறேன் என்று கூறி அணியில் இருந்து விலகினார். அதனைத்தொடர்ந்து அவர் தனது உடற்தகுதி மற்றும் பந்துவீசும் பயிற்சியில் தீவிரம் காட்டி வந்தார்.

pandya

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக பங்கேற்று விளையாடி வரும் அவர் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அசத்தலாக செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக குஜராத் அணியை அவர் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வைத்துள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் வருகிற 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரின் போது ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

pandya 2

அதன்படி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, கே.எல் ராகுல், கோலி, பும்ரா மற்றும் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது. இதன்காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு புதிய கேப்டன் அறிவிக்கப்பட உள்ளார். அப்படி டி20 தொடரின் கேப்டனாக அறிவிக்கப்படும் வீரர்களுக்கான பட்டியலில் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது பெயர் முன்னிலையில் உள்ளது.

- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பாண்டியா கேப்டனாக அசத்தலாக செயல்பட்டு வருவதால் இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது. இது அவருக்கு கிடைத்த ஜாக்பாட் என்றே கூறலாம்.

இதையும் படிங்க : தெ.ஆ அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்த இருவரில் ஒருத்தர் தான் கேப்டனாம் – விவரம் இதோ

ஏனெனில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஐ.பி.எல் தொடரில் தனது அசத்தலான ஆட்டம் மற்றும் கேப்டன்சி காரணமாக இந்திய அணிக்கு மீண்டும் திரும்பவுள்ள அவர் கேப்டனாகவே திரும்புவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் தற்போது பாண்டியா மகிழ்ச்சியில் இருப்பார் என்றே கூறலாம்.

Advertisement