குடோனில் தங்கியிருந்தேன்…ரெய்னா தான் உதவி செய்தார்…என்னகு குரு அவர் தான்.. ஐபில் வீரர் நெகிழ்ச்சி !

suresh-raina
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல்-இல் பங்கேற்கும் பலரும் தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்தும் தங்ககளது கருத்துகளை சமூகவலைத்தளங்களில் பதிந்தும் வருகின்றனர்.அந்த வகையில் இந்த வருடம் கொல்கத்தா அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட இளம் வீரர் ரிங்குசிங் தற்போது மனம் திறந்துள்ளார். அதில் பல நெகிழ்ச்சியான சம்பவங்களை குறித்தும் நம்மிடையே தெரிவித்துள்ளார்.

raina

- Advertisement -

ரிங்கு சிங் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அலிகாரில் பிறந்தவர்.கடந்த ஐபிஎல்-இல் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்காக ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர் இம்முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 80லட்சத்திற்கு ஏலமெடுக்கப்பட்டுள்ளார்.

இளம் வீரரான ரிங்கு இடது கை பேட்ஸ்மேன். இளம் வயது முதலே கிரிக்கெட்டில் தீவிர ஆர்வம் கொண்டவரும்.2009-ம் வருடத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும், அதன் பின்னர் 19 வயதுக்கட்பட்டோருக்கான அணியிலும் இடம் பெற்று விளையாடியவர்.பின்னர் விஜய்ஹசாரே போட்டிகளிலும், ரஞ்சிக் கோப்பை போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி சதம் அடித்ததால், ரிங்கு சிங் கிரிக்கெட்டில் அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பினார்.

rinku

கேஸ் குடோனில் தந்தையுடன் தங்கிய ரிங்கு.மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரிங்கு சிங்கு தனது தந்தை கான்சந்திர சிங் வேலைசெய்யும் சமையல் எரிவாயு சிலிண்டர் குடோனிலேயே ஒரு சிறு அறையில் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்தார்.ரிங்குவிற்கு உடன் பிறந்தவர்கள் 3 சகோதரிகள், ஒரு சகோதரரும்.ரிங்குவிற்கு உதவிய சுரேஷ்ரெய்னா. உத்தரப் பிரதேச அணிக்காக ரிங்கு ரஞ்சிப் போட்டியில் விளையாடும் போது சுரேஷ் ரெய்னாவுடன் பழக வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது எப்படி விளையாட வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை ரெய்னா ரிங்குவிற்கு வழங்கியுள்ளார்.

- Advertisement -

பின்னர் ரிங்குவின் குடும்பத்தை பற்றி கேட்டு தெரிந்துகொண்ட ரெய்னா ரிங்குவின் நிலையை புரிந்துகொண்டு அன்று முதல் பல்வேறு உதவிகளை தொடர்ச்சியாக தனது மற்றொரு நண்பரான யுவராஜ்சிங்வுடன் இணைந்து செய்துள்ளாராம். இதுகுறித்து பேசிய ரிங்கு “நானும் சுரேஷ் ரெய்னாவும் ரஞ்சி கோப்பையில் விளையாடும் போது என்னுடைய குடும்பம் குறித்தும் குடும்ப சூழல் குறித்தும் கேட்டு தெரிந்துகொண்டார்.என்னுடைய ஏழ்மையான சூழலை புரிந்துகொண்ட அவர் பல்வேறு உதவிகளை செய்தார்.

ஒருதடவை நான் குடும்பத்துடன் வசித்து வரும் சமையல் எரிவாயு குடோனுக்கு வந்து எனக்கு விளையாட தேவையான பேட் கிளவுஸ் போன்ற பொருட்களை வாங்கிக் தந்துவிட்டு சென்றார்” என்றார்.மேலும் பேசுகையில் ரெய்னா தான் கிரிக்கெட்டில் என்னுடைய குரு. அவர் எனக்கு அளித்த சொல்லிக்குடுத்த நுணுக்கங்களின் அடிப்படையில்தான் இன்றுவரை விளையாடி வருகிறேன். ஐபிஎல் போட்டியிகளை பொறுத்தவரையில் இருவரும் வேறுவேறு அணியில் இருந்தாலும், அவர் என்னை எப்பொழுதுமே வழிநடத்திடுவார் என்றார்.

Advertisement