ஐ.பி.எல் வரலாற்றில் இதுவே முதல் முறை. சின்ன தல ரெய்னா படைத்த சாதனை – விவரம் உள்ளே

Raina
- Advertisement -

நேற்று துவங்கிய 12ஆவது ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி சொற்ப ரன்களில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து ஆடிய சென்னை அணி எளிமையாக சேசிங் செய்து பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

VK and MS

- Advertisement -

இந்த போட்டியில் விளையாடிய சென்னை அணி வீரரான சுரேஷ் ரெய்னாவிற்கு இது 177ஆவது போட்டியாகும். இந்த போட்டியில் ரெய்னா 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் ரெய்னா 15 ரன்களை எடுத்தபோது ஐ.பி.எல் போட்டிகளில் முதல் வீரராக 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையினை பெற்றார்.

இவருக்கு அடுத்த இடத்தில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி 164 போட்டிகளில் 4954 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இன்னும் 46 ரன்கள் எடுத்தால் ரெய்னாவிற்கு அடுத்து இந்த சாதனை படைத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைப்பார். கோலி சென்னைக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ABD

சென்னை அணி அடுத்ததாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் மோத உள்ளது. அந்த போட்டிக்காக சென்னை அணி இன்று விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தது.

Advertisement