CSK & KKR க்கு எதிரான நேற்றைய போட்டியில் 9 சாதனைகள்…இதில் ரெய்னா எத்தனை சாதனை தெரியுமா !

karthik
- Advertisement -

நேற்றைய சென்னை சூப்பர்கிங்ஸ்–கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணி 5விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

kkr

- Advertisement -

இதில் நேற்றைய போட்டியின்போது பல்வேறு புதிய சாதனைகள் நடத்தப்பட்டன.

இதோ அந்த சாதனை பட்டியலின் விவரங்கள் உங்களுக்காக.

1. ஐபிஎல் போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் 10 சிக்ஸர்களை குவித்த இரண்டாவது வீரர் என்கிற பெருமையை பெற்றார். இதற்கு முன்னதாக முதல் ஐபிஎல் சீசனில் மெக்கல்லம் ஒரே இன்னிங்ஸில் 158 ரன்களை குவித்தபோது 10 சிக்ஸர்களை அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2. ரஸ்ஸல் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை குவித்து புதிய சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியின்போது ரஸ்ஸல் 11சிக்ஸர்களை விளாசியிருந்தார். முன்னதாக முதல் ஐபிஎல் சீசனில் இலங்கையை சேர்ந்த ஜெயசூர்யா ஒரே இன்னிங்ஸில் 11சிக்ஸர்களை விளாசி சாதனை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

3. ஐபிஎல் போட்டிகளில் தங்கள் அணி வீரர்களை ரன்அவுட் ஆக்கி விடுவதில் தினேஷ் கார்த்திக் 9முறை செய்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் உள்ளார் ரோகித்சர்மா (21) இடத்தில் உள்ளார்.

- Advertisement -

4. நேற்றைய போட்டியில் சாம் பில்லிங்ஸ் அடித்த அரைசதம் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக அடிக்கப்பட்ட அதிவேக சதமாகும். நேற்றைய போட்டியின்போது 21 பந்துகளில் அவர் அரைசதம் கடந்தார். சுரேஷ்ரெய்னா இதற்கு முன்னதாக சென்னை அணிக்காக 16பந்துகளில் அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். தோனி 20 பந்துகளில் அரைசதம் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.

5. ஒரு போட்டியில் இருஅணிகளும் இணைந்து அதிக சிக்ஸர்களை அடித்த சாதனையை நேற்று கொல்கத்தா & சென்னை அணிகள் செய்துள்ளன.
நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியின் சார்பில் 17 சிக்ஸர்களும் சென்னை அணியின் சார்பில் 14 சிக்ஸர்களும் என ஒட்டுமொத்தமாக 31 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது.கடந்த 2017 ஐபிஎல் சீசனில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் இதே 31 சிக்ஸர்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

6. கொல்கத்தா அணி நேற்றைய போட்டியில் கடைசி 5ஓவர்களில் 80 ரன்களை குவித்தது.

7. 7வது ஆட்டக்காரராக இறங்கி ஐபிஎல் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்கிற சாதனையையும் நேற்றைய போட்டியில் ரஸ்ஸல் நிகழ்த்தினார். நேற்று 7வது ஆட்டக்காரராக களமிறங்கி 88ரன்களை குவித்தார்.

8. சுரேஷ்ரெய்னா கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டங்களில் 715 ரன்களை குவித்துள்ளார். ஒரு அணிக்கு எதிராக ஒரு வீரர் அதிகபட்சமாக எடுத்துள்ள ஸ்கோர் இதுதான்.

9. சென்னை சூப்பர்கிங்ஸின் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் 3000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்கிற சாதனையை சென்னை அணியின் கேப்டன் தோனி புரிந்தார். முன்னதாக சுரேஷ்ரெய்னா 3717 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார்.

இந்த ஒன்பது புதிய சாதனைகளும் நேற்றை போட்டியில் மட்டும் நிகழ்ந்திருப்பதும் ஒரு அதிசயம் தான்.

Advertisement