நானும் பிராமின் தான். டி.என்.பி.எல் வர்ணனையின் போது தவறாக வார்த்தையை விட்டு சர்ச்சையில் சிக்கிய – ரெய்னா

Raina
- Advertisement -

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களையும் வைத்து ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் நடைபெறுவது போலவே கடந்த சில ஆண்டுகளாக தமிழக மாவட்டங்களை மையமாகக்கொண்டு டிஎன்பிஎல் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக நடைபெறாத இந்த தொடர் இந்த ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று கோலாகலமாக துவங்கியது. அனைத்து போட்டிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

TNPL

- Advertisement -

இந்த தொடரின் துவக்க போட்டி சேலம் மற்றும் கோவை அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியின்போது சிறப்பு அழைப்பாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா வர்ணனையாளர் உடன் வீடியோ காலிங் மூலம் நேரலையில் கலந்துகொண்டு தமிழகத்தில் தனக்கு உண்டான உறவும், சிஎஸ்கே அணிக்கு விளையாடும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்த மகிழ்ச்சியான கருத்துக்களையும் வெளிப்படுத்தினார்.

அப்படி வெளிப்படுத்தும்போது தமிழக கலாச்சாரம் மிகவும் பிடிக்கும் என்றும் தான் வேட்டி அணிவது மட்டுமின்றி தமிழ் பாடல்களுக்கு நடனம் ஆடுவது, விசிலடிப்பது போன்ற விடயங்களை கடைப்பிடிப்பதாக கூறினார். மேலும் தொடர்ந்து பேசுகையில் : நானும் பிராமணன்தான் சென்னையில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறேன். எனக்கு சென்னையும் அங்கிருக்கும் கலாச்சாரமும் மிகவும் பிடிக்கும்.

raina 1

சென்னை அணியில் தமிழக வீரர்களான அனிருதா ஸ்ரீகாந்த், பத்ரிநாத், பாலாஜி ஆகியோர் உடன் விளையாடி இருக்கிறேன். சென்னை மக்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் என ரெய்னா கூறினார். இதில் சர்ச்சையான விடயம் யாதெனில் சென்னை என்றாலே பிராமணர்கள்தான் என்று நினைத்து தானும் பிராமணன்தான் என்று சுரேஷ் ரெய்னா கூறியிருப்பது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Raina

மேலும் சுரேஷ் ரெய்னாவின் இந்த கருத்தை கண்டித்து ரசிகர்களும் எதிர் விமர்சனம் அளித்து வருகின்றனர். 34 வயதாகும் ரெய்னா உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதனால் இந்த விவரங்கள் தெரியாமல் பேசி இருக்கலாம் என்று அவருக்கு ஒரு புறம் ஆதரவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement