தோனி கிட்ட இருந்து தான் நான் அந்த விஷயத்தை கத்துக்கிட்டேன் – ராகுல் திரிபாதி ஓபன்டாக்

Tripathi
- Advertisement -

ஐபிஎல் தொடரின் மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் இளம் வீரர்கள் தங்களது திறனை வெளிக் காட்டுவது வழக்கம். அந்த வகையில் 31 வயதான ராகுல் திரிப்பாதி கடந்து 2017 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இதுவரை 62 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1385 ரன்களை குவித்துள்ளார். கொல்கத்தா அணிக்காக இவர் சிறப்பாக விளையாடி இருந்தாலும் அந்த அணி இவரை மெகா ஏலத்தில் எடுக்கவில்லை.

tripathi 1

- Advertisement -

ஆனால் சன்ரைசர்ஸ் அணி அவரது திறனை அறிந்து 8.50 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. இம்முறை ஆரஞ்சு நிற ஜெர்சியுடன் விளையாட இருக்கும் ராகுல் திருப்பதி தான் இந்த ஐபிஎல் தொடரில் திறமையை வெளிக்காட்ட ஆவலாக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தோனியிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட ஒரு விடயத்தைப் பற்றியும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : போட்டியின் இக்கட்டான சூழ்நிலைகளில் எனக்கு பேட்டிங் செய்ய மிகவும் பிடிக்கும். அதே போன்று இக்கட்டான நிலையில் சிக்ஸர் அடிக்கவும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

tripathi 1

எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் போட்டி நகர்ந்தாலும் அதனைப்பற்றி பதட்டப்படாமல் நான் இயல்பாக எனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து விளையாடுவேன். இந்த விஷயத்தை நான் தோனியிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன். எவ்வளவு கடினமான சூழலில் இருந்தாலும் பொறுமையாக போட்டியை நகர்த்தி செல்லும் அந்த யுக்தியை நான் தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.

- Advertisement -

அவரைப் போன்றே சிறந்த பினிஷராக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அந்த வகையில் தற்போது நான் சிறப்பாக செயல்பட்டு வருவதாக நினைக்கிறேன் என்று ராகுல் திரிபாதி கூறினார். கடந்த 2017 ஆம் ஆண்டு தோனியின் தலைமையின் கீழ் புனே அணியில் தான் அவர் அறிமுகமானார். அதேபோன்று தோனியின் சொந்த ஊரான ராஞ்சி தான் ராகுல் திரிபாதியின் சொந்த ஊர் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

இதையும் படிங்க : வார்னே எனக்கு அனுப்புன அந்த மெசேஜ்ஜ எப்போவும் நான் டெலிட் பண்ண மாட்டேன் – கலங்கிய கில்க்ரிஸ்ட்

இந்தியாவில் வருகிற மார்ச் 26-ஆம் தேதி துவங்கி மே மாதம் இறுதி வரை நடைபெற உள்ள இந்த 15 ஆவது ஐபிஎல் தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement