வார்னே எனக்கு அனுப்புன அந்த மெசேஜ்ஜ எப்போவும் நான் டெலிட் பண்ண மாட்டேன் – கலங்கிய கில்க்ரிஸ்ட்

Gilchrist
- Advertisement -

கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதி தாய்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த செய்தி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் உலகெங்கிலும் இருந்து அவரது இந்த மறைவிற்கு இரங்கல் வாழ்த்துக்கள் குவிந்தன. மேலும் அவரது கிரிக்கெட் பயணம் குறித்த பல தகவல்களும் பகிரப்பட்டு இருந்தது.

Warne-2

- Advertisement -

அதோடு மட்டுமில்லாமல் ஷேன் வார்ன்னுடன் நெருக்கமாக இணைந்து விளையாடிய பல முன்னாள் வீரர்கள் அவருடன் உண்டான நட்பு குறித்தும் பல்வேறு தகவலை வெளியிட்டு இருந்தனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ஆடம் கில்கிறிஸ்ட் ஷேன் வார்ன் உடனான ஒரு முக்கியமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் :ஷேன் வார்ன் இறப்பதற்கு சுமார் 8 மணி நேரத்திற்கு முன்னதாக எனக்கு போன் மூலம் மெசேஜ் செய்திருந்தார். அந்த மெசேஜில் அன்று உயிரிழந்த ராட் மார்சுக்கு செலுத்தப்பட்ட இறுதி அஞ்சலி குறித்து அவர் குறிப்பிட்டு எனக்கு அனுப்பியிருந்தார். அந்த மெசேஜை நான் ஒருபோதும் டெலிட் செய்ய மாட்டேன்.

warne rod marsh

ஏனெனில் ஷேன் வார்ன்னிடம் இருந்து எனக்கு வந்த கடைசி மெசேஜ் அதுதான். எனவே நிச்சயம் நான் அதை என் போனில் அப்படியே வைத்திருப்பேன். அதை ஒருபோதும் டெலிட் செய்யப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் மற்றும் 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வார்ன் சர்வதேச கிரிக்கெட்டில் 1001 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 52 வயதான வார்ன் கடந்த 4ஆம் தேதி தாய்லாந்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த பின்னர் அவரது பிரேத பரிசோதனையில் இது இயற்கையான மரணம் என்று கூறப்பட்டது.

இதையும் படிங்க : ரோஹித் தப்பா சொல்லிட்டாரு, அஷ்வின் அவ்ளோ ஒர்த் இல்ல – ஒப்புக்கொள்ள மறுக்கும் முன்னாள் பாக் வீரர்

அதோடு அவரது உடல் அங்கிருந்து ஆஸ்திரேலியா அனுப்பப்பட்டு வரும் 20ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் ரசிகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement