பரவால்ல இந்தியாவுக்காக விளையாடாவிட்டாலும் ஜெர்ஸியை போட்டதே போதும் – இளம் வீரர் ஆதங்கத்துடன் பெருமை

IND vs WI 5th T0I
- Advertisement -

மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அனைத்து துறைகளிலும் கடுமையான போட்டி நிலவுவதை போலவே வெறும் 11 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு இடத்தை பிடிப்பதற்கு ஏராளமான போட்டி நிலவுவது வழக்கமாகும். அதனால் சில வீரர்கள் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து திறமையை வளர்த்துக் கொண்டாலும் நட்சத்திர அந்தஸ்து அல்லது அணி நிர்வாகத்தின் ஆதரவு இல்லாத காரணத்தால் புறக்கணிக்கப்படுவதும் வழக்கமாகும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக மகாராஷ்டிராவை சேர்ந்த வீரர் ராகுல் திரிபாதி திகழ்கிறார். கடந்த 2010 முதல் இந்தியாவுக்காக விளையாடும் ஆசையில் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி வரும் இவர் 2017 முதல் ஐபிஎல் தொடரிலும் விளையாடி வருகிறார்.

tripathi

- Advertisement -

ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் சமீபகாலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இவர் கேரியரில் உச்சபட்சமாக இந்த வருட ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 413 ரன்களை 37.55 என்ற நல்ல சராசரியில் 158.24 என்ற சிறப்பான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து அசத்தினார். அதனால் சமீப காலங்களில் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த ரசிகர்கள் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் நடந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் மீண்டும் அவர் புறக்கணிக்கப்பட்டதால் கொந்தளித்தனர். அதனால் அதைத்தொடர்ந்து நடைபெற்ற அயர்லாந்து டி20 தொடரில் வேறு வழியின்றி தேர்வுக்குழு முதல் முறையாக அவரை தேர்வு செய்தது.

ஜெர்ஸியே போதும்:
ஆனாலும் அந்த தொடரில் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பை பெறாத அவர் அதன்பின் நடந்த இங்கிலாந்து டி20 தொடரில் சீனியர்கள் வந்ததால் கழற்றி விடப்பட்ட நிலையில் அதற்கு முன்பாக நாட்டிங்காம்ஷைர் அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சி போட்டியில் முதல் முறையாக இந்தியாவுக்காக விளையாடினார். அதன்பின் சமீபத்திய ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் மீண்டும் தேர்வு செய்யப்பட்ட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஜிம்பாப்வே பலவீனமான அணி என்பதால் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக கருதப்பட்ட அந்த தொடரில் ராகுல் திரிபாதி உட்பட யாருக்குமே முதல் முறையாக அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பு கிடைக்காமல் ஏற்கனவே விளையாடிய வீரர்கள் விளையாடினர்.

Rahul-Tripathi

தற்போது மீண்டும் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ள அவர் 31 வயதை கடந்துவிட்ட நிலையில் அறிமுகமாவதற்கே தவமாக காத்துக் கிடக்கிறார். இந்நிலையில் போட்டி நிறைந்த இந்திய அணியில் இதுவரை விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இந்தியாவின் ஜெர்ஸியை அணிந்ததே மிகப் பெரிய மகிழ்ச்சி என ராகுல் திரிபாதி மகிழ்ச்சி கலந்த ஆதங்கத்துடன் பேசியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக விளையாடா விட்டாலும் உத்தேச அணியில் இடம்பிடித்ததே எனக்கு மகிழ்ச்சியாகும். ஏற்கனவே சிலர் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதால் எனக்கான வாய்ப்பும் நேரமும் வரும் என்று நம்புகிறேன்”

- Advertisement -

“அதுவரை நான் என்னுடைய வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன். இருப்பினும் தேர்வு செய்யப்படும் போது இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும். விரைவில் அது நடைபெறும் என்று நம்புகிறேன். ஜிம்பாப்வே தொடரில் வாய்ப்பு கிடைக்காததை நான் ஏமாற்றமாக பார்க்கவில்லை. நிறைய பேர் இருப்பதால் அணிக்கு தேவைப்படுபவர்களே தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே அனைவரும் வாய்ப்பை பெறுவது போல் நானும் விரைவில் வாய்ப்பு பெறுவேன் என்று நம்புகிறேன்”

Rahul Tripati

“அதைவிட இந்திய அணியில் என்னுடைய பெயர் இடம் பிடித்தது கனவு நிஜமானது தருணமாகும். இந்தியாவுக்காக விளையாட விரும்பும் வீரர்களுக்கு அதுதான் கனவின் முதல் வெற்றியாகும். அந்த தருணம் எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் பெருமையான தருணமாகும். அது பயிற்சி போட்டி (நாட்டிங்காம்ஷைர் அணிக்கு எதிராக) என்றாலும் அந்தப் போட்டியில் இந்தியாவின் ஜெர்சி அணிந்து பேட்டிங் செய்தது என்னுடைய கேரியரில் ஸ்பெஷல் தருணமாகும். அந்த வகையில் எந்த போட்டியாக இருந்தாலும் இந்தியாவுக்காக விளையாடுவது எப்போதும் ஸ்பெஷலாகும். அது பயிற்சி போட்டியாக இருந்தாலும் நல்ல உணர்வாக அமைந்தது” என்று கூறினார்.

மேலும் 30 வயதானாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பை உட்பட இந்தியாவுக்காக விளையாடுவதற்கு தேவையான அத்தனை முயற்சிகளையும் பயிற்சிகளையும் செய்து உழைத்து வருவதாக கூறும் ராகுல் திரிபாதி ஒருநாள் தன்னுடைய உழைப்பின் பயனாக தமக்கான நேரமும் வாய்ப்பும் தேடி வரும் என்று உறுதியான நம்பிக்கையுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார்.

Advertisement