இந்திய அணியில் என்னை தேர்வு செய்வதற்கான நேரம் வரும். நம்பிக்கையுடன் காத்திருக்கும் – அதிர்ஷ்டமற்ற வீரர்

Tewatia
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ம் தேதி துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரில் ஏற்கனவே இருந்த 8 அணிகளுடன் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களின் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட இரண்டு அணிகளும் சேர்த்து 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றதன் காரணமாக மேலும் பல இளம் வீரர்களுக்கு சர்வதேச வீரர்கள் உடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதனை அற்புதமாக பயன்படுத்திய இளம் வீரர்கள் பலரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். அதோடு அவர்களது தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு காரணமாக இந்திய அணியின் தேர்வாளர்களின் கவனத்தையும் அவர்கள் ஈர்த்துள்ளனர்.

LSG vs GT

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நிறைய முடிவடைந்த பிறகு நடைபெற உள்ள தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சாதித்த பல இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டும் சில வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் குஜராத் அணிக்காக இந்த ஆண்டு முழு நேர பேட்ஸ்மேனாக விளையாடி வரும் ஆல்ரவுண்டர் ராகுல் திவாதியா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அவர் இந்திய அணிக்கு தேர்வாகாததில் வருத்தம் அடைந்துள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் அதிரடியாக பேட்டிங் செய்யும் திறன் உடையவர். அதன் காரணமாக ஒரு பெரிய தொகைக்கு குஜராத் அணியில் எடுக்கப்பட்டிருந்த அவர் இந்த ஆண்டு பல போட்டிகளில் அந்த அணிக்காக பின்வரிசையில் களமிறங்கி தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் போட்டியை ஃபினிஷிங் செய்து கொடுத்து வருகிறார்.

Rahul Tewatia 3

தற்போது குஜராத் அணி இறுதிப்போட்டி வரைக்கும் வந்துள்ளது என்றால் இவரது பங்கும் அளப்பரியது என்றால் அது மிகை அல்ல. அந்த வகையில் சிறப்பாக விளையாடி வரும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள ராகுல் திவாதியா கூறுகையில் : இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பது அனைவரும் ஆசைப்படும் ஒரு விடயம் தான். அந்த வகையில் நானும் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற கனவு இருக்கிறது.

- Advertisement -

தற்போது உள்ள இந்திய அணியை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனாலும் நான் என்னுடைய ஆட்டத்தை நிறுத்தப்போவதில்லை. தொடர்ந்து என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டே இருப்பேன். நிச்சயம் ஒருநாள் எனக்கான நேரம் வரும் என்று கூறியுள்ளார். மேலும் குஜராத் அணி குறித்து பேசிய அவர் : இறுதிப் போட்டியில் நாங்கள் எந்த வித புது திட்டத்தையும் யோசிக்கவில்லை.

இதையும் படிங்க : கிங் ஆஃப் ஃபைனல்ஸ் ! ஐபிஎல் வரலாற்றில் இறுதி போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த டாப் 6 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

எப்போதும் போல சிறப்பாக விளையாட வேண்டும் என்பது மட்டுமே தான் எங்களது நினைப்பாக இருக்கிறது என ராகுல் திவாதியா பேசினார். கடந்த ஆண்டே அவர் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போது இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் அப்போது அவரது உடல் தகுதியை நிரூபிக்கும் தேர்வில் தோல்வி அடைந்ததால் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement