கிங் ஆஃப் ஃபைனல்ஸ் ! ஐபிஎல் வரலாற்றில் இறுதி போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த டாப் 6 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

raina
- Advertisement -

ஐபிஎல் போன்ற உலகத்தரம் வாய்ந்த டி20 தொடரில் சாதாரண லீக் போட்டிகளில் கூட தரமான பவுலர்கள் கொடுக்கும் சவாலை சமாளித்து பெரிய அளவில் ரன்கள் குவிப்பது பேட்ஸ்மேன்களுக்கு சிரமமான ஒன்றாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிளே ஆஃப் போன்ற நாக் அவுட் போட்டிகளில் தோல்வியடைந்தால் வெளியேற வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படுத்தும் எக்ஸ்ட்ரா அழுத்தம் இயற்கையாகவே ஒரு பேட்ஸ்மேனை பதற்றமடைய வைத்து சுதந்திரமாக பேட்டிங் செய்வதற்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தும்.

ABD

- Advertisement -

சொல்லப்போனால் உலகத்தரம் வாய்ந்த ஒரு சில பேட்ஸ்மேன்கள் கூட நாக் – அவுட் போட்டிகள் என்று வந்தால் அதில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் சொதப்பி அவுட்டாகி விடுவார்கள். ஆனால் நாக்-அவுட் எனும் மிகப்பெரிய அழுத்தம் நிறைந்த போட்டியில் ஏற்படும் பரபரப்பிற்கு அஞ்சாமல் அதை தைரியமாக எதிர்கொண்டு சிறப்பாக செயல்பட கூடிய திறமை ஒருசில ஸ்பெஷலான வீரர்களுக்கு மட்டுமே இருக்கும். அவர்கள் லீக் சுற்றில் சொதப்பினாலும் கூட நாக் அவுட் என்று வந்தால் அல்வா சாப்பிடுவது போல தில்லாக நின்று கெத்தாக ரன்களை அடித்து தங்களது அணிக்கு வெற்றி தேடித் தருவார்கள்.

அப்படிப்பட்ட அவர்களுக்கு லீக் சுற்றை கடந்து பிளே ஆப் சுற்றை தாண்டி வெற்றி கோப்பையின் கடைசி இலக்கான இறுதிப்போட்டியில் ஏற்படும் அழுத்தத்தை சர்வசாதாரணமாக உடைத்து பெரிய அளவில் ரன்களை குவித்து தங்களது அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பது எளிதான ஒன்றாகும். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் ஃபைனல்களில் அதிக ரன்கள் அடித்த டாப் 6 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்:

Pollard

6. கைரன் பொல்லார்ட் 180: மும்பை சாம்பியன் பட்டம் வென்ற 5 வருடங்களில் இவரின் பங்கு அளப்பரியதாகும். குறிப்பாக முதல் சாம்பியன் பட்டம் வென்ற 2013 இறுதிப்போட்டியில் சென்னைக்கு எதிராக 60* (37) ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் 2019 பைனலில் மீண்டும் அதே சென்னைக்கு எதிராக 41* (25) ரன்கள் விளாசி 1 ரன் வித்தியாச வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் இறுதிப் போட்டிகளில் மொத்தம் 180 ரன்கள் அடித்துள்ள பொல்லார்ட் இந்த பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

5. எம்எஸ் தோனி 180: வரலாற்றில் அதிக இறுதிப் போட்டிகளில் விளையாடிய கேப்டன் என்ற சாதனை படைத்துள்ள எம்எஸ் தோனி பங்கேற்ற 9 பைனல்களில் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக தேவையான ரன்களை குவித்து சென்னை 4 சாம்பியன் பட்டங்களை வெல்ல முக்கிய பங்காற்றியவர். அதிலும் 2013இல் அதிகபட்சமாக 63* (45) ரன்களை அடித்த இவரும் 180 ரன்களை அடுத்து இந்த பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

murali viajy

4. முரளி விஜய் 181: தமிழகத்தின் நட்சத்திர தொடக்க வீரர் முரளி விஜய் 2010, 2011 போன்ற ஆரம்ப காலகட்டங்களில் சென்னை கோப்பையை வென்ற சீசன்களில் பட்டைய கிளப்பும் பேட்டிங்கை வெளிப்படுத்தியவர்.

- Advertisement -

அதிலும் 2011 ஐபிஎல் தொடரில் சொந்த ஊரான சேப்பாக்கம் மைதானத்தில் மைக் ஹசி உடன் தொடக்க வீரராக களமிறங்கி 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெங்களூருவை புரட்டி எடுத்த அவர் 95 (52) ரன்கள் விளாசி 2-வது முறையாக அதுவும் சொந்த மண்ணில் சென்னை கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றவர். 2010, 2011, 2012, 2013 ஆகிய வருடங்களில் நடந்த பைனலில் மொத்தம் 181 ரன்கள் குவித்துள்ள இவர் இந்த பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

rohith

3. ரோஹித் சர்மா 185: மும்பைக்கு 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா 2009இல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக உட்பட 7 ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடி 185 ரன்களை குவித்து இந்த பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக 2015 பைனலில் சென்னைக்கு எதிராக 68 (51) 2020 பைனலில் டெல்லிக்கு எதிராக 50* (26) ரன்களை குவித்து பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் அந்த அணியின் சரித்திர வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

Watson 1

2. ஷேன் வாட்சன் 236: ஏற்கனவே கூறியது நாக்-அவுட் போட்டிகள் என்றால் மிகவும் விரும்பும் ஒருசில வீரர்களில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் முக்கியமானவர். 2008இல் ராஜஸ்தானுக்காக 28 ரன்கள் எடுத்து வெற்றிக்கு பங்காற்றிய அவர் 2018இல் சென்னைக்காக ஹைதராபாத் நிர்ணயித்த 179 ரன்கள் இலக்கை தனி ஒருவனாக சதமடித்து 117* (57) ரன்கள் குவித்து சேசிங் செய்து 3-வது கோப்பையை வென்று கொடுத்தவர்.

மேலும் 2019 ஃபைனலில் ரத்தம் சொட்ட சொட்ட 80 (59) அடித்து வெற்றிக்காக போராடியதையெல்லாம் காலத்துக்கும் மறக்க முடியாது. அந்த வகையில் பைனல்களில் மொத்தம் 236 ரன்களை குவித்துள்ள அவர் இந்த பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார்.

Raina

1. சுரேஷ் ரெய்னா 249: உலகிலேயே ஒருசில வீரர்கள் மட்டுமே லீக், நாக் – அவுட், பைனல் என அனைத்து வகையான போட்டிகளையும் ஒரே மாதிரியாக பார்த்து அழுத்தம் என்றால் என்னவென்றே தெரியாததை போல் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியைப் பெற்றுத் தருவார்கள். அதில் முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை விளையாடிய 9 பைனல்களில் 2021 தவிர 8 போட்டிகளில் நம்பிக்கை நட்சத்திரமாகவும் துருப்புச் சீட்டாகவும் செயல்பட்டவர்.

குறிப்பாக 2010இல் மும்பைக்கு எதிரான பைனலில் 57* (35) ரன்களை விளாசிய அவர் சென்னை முதல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதேபோல் 2012இல் கொல்கத்தாவுக்கு எதிரான பைனலில் 73 (38) ரன்களை அடித்த அவர் மொத்தம் 249 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் இறுதிப் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். இதன் காரணமாகவே வல்லுநர்கள் அவரை மிஸ்டர் ஐபிஎல் என்று இன்றும் போற்றுகிறார்கள்.

Advertisement