அவர் சிங்கிள் கொடுத்தார். நான் ரிஸ்க் எடுத்தேன். கடைசில் ஜெயிச்சாச்சி – ஹீரோ ராகுல் திவாதியா மகிழ்ச்சி

Tewatia
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 26 வது லீக் போட்டி நேற்று முதல் போட்டியாக துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

srhvsrr

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 54 ரன்கள், வார்னர் 48 ரன்களும் குவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ராகுல் திவாதியா 28 பந்துகளில் 45 ரன்களும், ரியான் பராக் 26 பந்துகளில் 42 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக ராகுல் திவாதியா தேர்வானார். இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆட்ட நாயகன் ராகுல் திவாதியா கூறுகையில் : நான் பேட்டிங் இறங்கும்போதே என்னுடைய ரோல் என்ன என்பதை புரிந்தே களமிறங்கினேன். நான் தற்போது சிறப்பாக பேட்டிங் செய்வது வருகிறேன்.

parag

அதுமட்டுமின்றி வலைப்பயிற்சியில் என்னால் பந்துகளை பலமாக அடிக்க முடிகிறது. எனவே இந்த போட்டியில் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று நினைத்தேன். நான் களமிறங்கியதும் என்னிடம் ரியான் பராக் வந்து விக்கெட் மிகவும் மெதுவாக உள்ளது. அதனால் போட்டியை இறுதி வரை கொண்டு செல்லலாம். மேலும் கடைசி 4-5 ஓவர்களில் 55 முதல் 60 வரை இருந்தாலும் நம்மால் அடிக்க முடியும் என்று நம்பிக்கை கொடுத்தார்.

- Advertisement -

அதேபோன்று இறுதியில் நாங்கள் இருவருமே பவர் ஹிட்டர்ஸ் என்பதை உணர்ந்து எங்களால் அடிக்க முடியும் என்றும் உறுதியாக இருந்தோம். அப்பொழுதுதான் ரஷித் கான் ஓவரை வீச வரும் பொழுது நான் ரியான் பராக் இடம் சென்று நல்ல பந்துகளை அடிக்க வேண்டாம். அதற்குகு மரியாதை கொடு மேலும் ஒரு சிங்கிள் எடுத்துக்கொடுத்தால் நான் இந்த ஓவரில் ரிஸ்க் எடுக்கிறேன் என்று அவரிடம் கூறினேன். அதே போன்று அவரும் சிங்கிள் கொடுக்க ரசித் கான் ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்தேன்.

Tewatia

முதல் 2 பவுண்டரிகளை பீல்டர்கள் எங்கே நிற்கிறார்கள் என்பதை பார்த்து ரிவர்ஸ் ஸ்வீப் அடித்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று அடித்தேன். மூன்றாவது பவுண்டரி அந்த முதல் இரண்டு பவுண்டரி அடித்ததால் எனக்கு கிடைத்த தைரியத்தை வைத்து என்னுடைய ஸ்லாட்டில் வந்த பந்தை லாங் ஆனில் அடித்தேன். மொத்தத்தில் இந்த போட்டியை நாங்கள் இருவரும் வெற்றி பெற்றுக் கொடுத்ததில் மகிழ்ச்சி என்று ராகுல் திவாதியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement