ரஷீத் கானை சொல்லி வைத்து துவைத்து எடுத்தார். அந்த மாதிரி ஒரு இன்னிங்க்ஸை நான் எதிர்பார்க்கல – ராகுல் வியப்பு

Rahul
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப்போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ரசிகர்கள் காண காத்திருக்கின்றனர். கடந்த 4 மாதங்களாக எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் நடைபெறவில்லை. மேலும் இனி வரப்போகும் கிரிக்கெட்டிலும் ரசிகர்களில் உடன் நடைபெறுமா என்பதிலும் சந்தேகம் உள்ளது.

Rahul 1

- Advertisement -

இந்நிலையில் இந்த கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள ஓய்வு நேரத்தை கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது மற்றும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்வது என பிஸியாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அந்தவகையில் தற்போது இந்திய அணியின் இளம் வீரரான ராகுல் சில விடயங்களை பகிர்ந்துகொண்டார்.

அந்த உரையாடலில் கிறிஸ் கெயில் உடனான தனது அனுபவம் குறித்தும் ஐபிஎல் நினைவுகளையும் அவர் பகிர்ந்துள்ளார். அதன்படி இந்திய அணியின் துவக்க வீரரான மாயங்க் அகர்வாலுடன் பேசிய ராகுல் கெயில் குறித்த சுவாரசியமான விடயங்களை பகிர்ந்து கொண்டார். ஒருமுறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணி மோதியது.

அந்த போட்டியில் கெய்ல் மற்றும் ராகுல் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். அந்த போட்டி குறித்து பேசிய ராகுல் அன்றைய போட்டியில் கெய்ல் என்னிடம் வந்து ரஷித் கான் மட்டும் இன்று பந்து வீச வந்தால் நான் அவரைக் காலி செய்வேன். ஸ்பின் பவுலர்கள் என்னை முறைப்பது எனக்கு பிடிக்காது.

- Advertisement -

ஒருவேளை ரஷீத் கான் என்னை முறைத்தால் நான் அவரை இன்று காலி செய்யப் போகிறேன் என்று கெயில் கூறியதாக ராகுல் குறிப்பிட்டுள்ளார். ராகுல் குறிப்பிட்ட அந்த போட்டியில் கெயில் 63 பந்துகளில் 103 ரன்களை குவித்து இருந்தார். அதிலும் குறிப்பாக ரஷித் கான் பந்து வீச்சில் 16 பந்துகளில் 42 ரன்கள் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது. 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி அருமையான வெற்றியை ருசித்தது.

Gayle

மேலும் அன்றைய நாள் குறித்து பேசிய ராகுல் அன்று அவர் சதம் அடிப்பார் என்று கணித்தேன். அதுமட்டுமின்றி அன்று மாறுபட்ட விதமாக அவர் பேட்டிங் செய்ய போவதாகவும் தான் நினைத்ததாகவும் அதே போன்று தனது அதிரடியை அன்று கெயில் வேறுமாதிரி காண்பித்தார் எனவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement