மாயங்க் அகர்வால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டதுக்கு இதுவே காரணம் – ஓபனாக உண்மையை சொன்ன ராகுல்

Agarwal

ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

rahul

அதன்படி பஞ்சாப் அணி தற்போது முதல் இன்னிங்சை விளையாடி முடித்துள்ளது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து அவர்கள் 179 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக ராகுல் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோன்று அதிரடியாக விளையாடிய கெயில் 24 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார்.

அதனை தொடர்ந்து தற்போது 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பெங்களூர் அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் பெங்களூரு அணியில் சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்க்டன் சுந்தருக்கு பதிலாக சபாஷ் அகமது விளையாடினார். அதேபோன்று பஞ்சாப் அணியில் துவக்க வீரர் அகர்வாலுக்கு பதிலாக சிம்ரன் விளையாடினார்.

agarwal 1

நன்றாக விளையாடும் அகர்வாலை ஏன் அணியிலிருந்து நீக்கினேன் என்பது குறித்து ராகுல் டாசின் போதே பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் கடந்த போட்டியில் விளையாடியபோது மயங்க் அகர்வால் தனது வலது முழங்கையில் காயம் அடைந்ததால் அவர் இந்த போட்டியில் விளையாட வில்லை என்றும் விரைவில் அவர் அணியில் இணைவார் என்று ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -