தோனியுடன் நான் விளையாடிய இந்த போட்டியே அவருடன் விளையாடிய மிகச்சிறப்பான இன்னிங்ஸ் – மனம்திறந்த ராகுல்

- Advertisement -

இந்திய அணியின் இளம்வீரரான கேஎல் ராகுல் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமானார். இவர் அறிமுகமான அந்த டெஸ்ட் தொடரிலேயே இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோனி. அதன் பின்னர் தற்போது வரை நான்கு வருடமாக இருவரும் சேர்ந்து விளையாடி உள்ளனர். ராகுல் தனது அசாத்தியமான பேட்டிங் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் எந்த இடத்தில் இறங்கினாலும் அதற்கேற்றார் போல் தனது பேட்டிங் யுக்தியையும் அவர் மாற்றி விளையாடுகிறார்.

Rahul

- Advertisement -

சமீபத்தில் பண்ட்டிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக திடீர் கீப்பர் வாய்ப்பினை பெற்ற ராகுல் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்படுவதால் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ரசிகர்களிடம் சமூக வலைத்தளத்தில் உரையாடிய கேஎல் ராகுல் தோனியுடன் தான் ஆடிய சிறந்த ஆட்டத்தைப் பற்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

கடந்த 2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினோம். இதில் டி20 தொடரின் முதல் போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 498 ரன்கள் குவித்தோம். அந்த அளவிற்கு போட்டி இறுதிவரை அதிரடியாக சென்றது.

இந்த போட்டியில் தான் நானும் தோனி அண்ணனும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்தோம். இதுதான் தோனியுடன் நான் ஆடிய மிகச்சிறந்த ஆட்டம் என்று குறிப்பிட்டுள்ளார் கேஎல் ராகுல். இந்த போட்டியில் இந்திய அணி 246 ரன்கள் இலக்கைத் தொட வேண்டி இருந்தது . ராகுல்110 ரன்கள் விளாசினார் .

தோனி 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். ஆனால் துரதிஸ்டவசமாக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது .இந்த ஆட்டத்தில் கேஎல் ராகுல் அபாரமாக ஆடி 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் விளாசி இருந்தார். கடைசி பந்தில் தோனி பிராவோ பந்துவீச்சில் ஆட்டமிழக்க இந்திய அணி அந்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement