என்னதான் கோலி 94 ரன் அடிச்சாலும் மேட்ச் ஜெயிச்சது இவராலதான் – அது யாருன்னு பாருங்க

Virat
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்தது.

kohli 3

- Advertisement -

பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக கோலி ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்தப் போட்டியின் வெற்றிக்கு கோலி அடித்த 94 ரன்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் ராகுலின் அந்த அதிரடியான துவக்கமும் வெற்றிக்கு காரணம் என்று ரசிகர்கள் இணையத்தில் ராகுலை பாராட்டி தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதற்கு காரணம் யாதெனில் 200 ரன்களுக்கு மேல் எதிரணி அடிக்கும்போது டி20 போட்டிகளில் அதனை துரத்துவது என்பது ஒரு கடினமான விடயம். ஏனெனில் துவக்கத்தில் விக்கெட்டுகளையும் இழந்து விட்டாலோ, ரன்ரேட் குறைந்து விட்டாலோ போட்டியில் மீண்டும் ஜெயிப்பது கடினம் ஆகிவிடும்.

Rahul-1

ஆனால் ராகுல் நேற்றைய போட்டியில் நிலைமையை சரியாக கணித்து துவக்கத்திலேயே அதிரடியாக விளையாடினார். ராகுல் 40 பந்துகளில் 62 ரன்களை அடித்தது இந்திய அணியின் வெற்றிக்கு விட்டதாக அமைந்தது என்றே கூறலாம். மேலும் 4 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் என்று அமர்க்களப்படுத்தி சிறப்பாக ஆடினார்.அவரின் இந்த சிறப்பான ஆட்டம் தொடரும் பட்சத்தில் தவானுக்கு பதிலாக நிரந்தர துவக்கவீரராக இந்திய அணியில் ராகுல் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement