பெங்களூரு அணியை வீழ்த்தியும் தலையில் கைவைத்தபடி தரையில் அமர்ந்த ராகுல் – எதற்கு தெரியுமா ?

Rahul

ஐபிஎல் தொடரில் 31 வது லீக் போட்டியில் நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

RCBvsKXIP

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 45 ரன்களும், கிறிஸ் மோரிஸ் 25 ரன்களும் அடித்தனர். 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

துவக்க வீரர்களான அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். 8 ஓவர்களில் 108 ரன்கள் சேர்த்த அவர்கள் நல்ல அடித்தளம் அமைத்தனர். அதன் பிறகு மூன்றாவதாக கிறிஸ் கெயில் வந்து தனது பங்கிற்கு சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ரன்-அவுட் ஆகி வெளியேறினார். கடைசி பந்தில் நிக்கலஸ் பூரன் ஒரு சிக்ஸ் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் அணி இந்த தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Gayle

இந்நிலையில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு ஓவர்களுக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. இருப்பினும் முக்கியமான 19வது ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. மேலும் கடைசி ஓவரில் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது அதனால் எளிதில் பஞ்சாப் அணி வென்றுவிடும் என்று எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ரன்கள் வரவில்லை மூன்றாவது பந்தில் ஒரு ரன் அடித்து கெயில் மறுபுறத்திற்கு ஓடி வந்தார். அதன் பின்னர் 3 பந்துகளில் 1 ரன் தேவைப்பட்டது. நான்காவது பந்தை ரன் அடிக்காமல் விட்ட ராகுல் ஐந்தாவது பந்தில் கெயிலை ரன் அவுட் ஆக்கினார். இதனால் எளிதாக 2 ரன்கள் அடிக்க வேண்டி ஓவர் கடைசி பந்து வரை வந்தது.

pooran

ஸ்கோர் சமநிலையில் இருந்தாலும் கடைசி பந்தில் ரன் வருமோ ? வராதோ ? என்ற பயத்தில் இருந்தத ராகுல் பூரான் வந்து தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தினார். அந்த படபடப்பில் அப்படியே ராகுல் தரையில் உட்கார்ந்தார். அவரின் இந்த செயலும் வெற்றிக்கான அந்த தருணமும் ரசிகர்களுக்கான விருந்தாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.