- Advertisement -
ஐ.பி.எல்

CSK vs RR : உலகக்கோப்பை பிரகாசமாகும் ராகுல் வாய்ப்பு. வெளியேற்றப்பட இருக்கும் சி.எஸ்.கே வீரர் – விவரம் உள்ளே

ஐ.பி.எல் தொடரின் 25 ஆவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் இன்று பயிற்சியினை மேற்கொண்டனர். கடந்த போட்டியில் விளையாடாத பிராவோ இந்த போட்டிலும் விளையாடமாட்டார். பிராவோவின் காயம் சரியாக இன்னும் ஒருவாரம் ஆகும். இந்நிலையில் இந்திய அணியின் உலகக்கோப்பை தொடரில் தேர்வாக இருக்கும் வீரர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 4 ஆவது இடத்தில் இறங்கும் வீரரின் இடம் தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. சமீபகாலமாக அந்த இடத்தில் ராயுடு களமிறங்கி ஆடிவந்தார். ஆனால், அவரது ஆட்டத்தில் ஏற்பட்ட தொய்வு மற்றும் இந்த ஐ.பி.எல் தொடரிலும் அவரது அவுட் ஆப் பார்ம்யை கருத்தில் கொண்டு அவர் இந்திய அணியில் நிராகரிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

மேலும், இளம் வீரரான ராகுல் தொடர்ந்து சிறப்பாக ஆடிவருவார்த்தாலும், இந்த ஐ.பி.எல் தொடரில் 4 அரைசதம் மற்றும் ஒரு சதம் என்று கலக்கி வருவதால் உலகக்கோப்பை அணியில் அவரது இடம் உறுதியாகியுள்ளது என்றே கூறவேண்டும். ராகுல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -
Published by