வெகுவிரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு.. ஐ.பி.எல் அணிக்கு பயிற்சியாளராக மாற இருக்கும் டிராவிட் – எந்த அணிக்கு தெரியுமா?

Robin Uthappa 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் வெற்றியுடன் தனது பதிவிலிருந்து வெளியேறினார். தனது குடும்பத்திற்காக நேரத்தை செலவிட வேண்டும் அவர் கேட்டுக் கொண்டதால் பிசிசிஐ-யும் அவரை தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க வற்புறுத்த விரும்பவில்லை என்றும் அவரது முடிவை மதிப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய ராகுல் டிராவிட் அடுத்ததாக என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் விரைவில் அவர் ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக மாற இருக்கிறார் என்றும் அது குறித்த அதிகாரவபூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்ற தகவலும் தற்போது வெளியாகியது.

- Advertisement -

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் 51 வயதான ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக மாற இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகமும் அவருடன் இந்த பதவி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதால் வெகு விரைவில் அவர் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டு அந்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -

கடந்த 2013, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் அவர் ராஜஸ்தான் அணியின் மென்டராக செயல்பட்டிருந்த அவர் பின்னர் 2015-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கும், இந்திய ஏ அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட்ட அவர் அதன் பின்னர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

இதையும் படிங்க : இதென்ன புதுசா? சாம்சன் கழற்றி விடப்பட இதான் காரணம்.. ரசிகர்களுக்கு வேற வழியில்லை.. உத்தப்பா கருத்து

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி பயிற்சியாளராகவும் இருந்த மிகப்பெரிய அனுபவம் கொண்ட அவரை ராஜஸ்தான் அணியின் நிர்வாகம் பயிற்சியாளராக பொறுப்பேற்க தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணியின் வெற்றிகரமான பயிற்சியாளராக செயல்பட்டுள்ள அவர் ராஜஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக மாறும் பட்சத்தில் நிச்சயம் அடுத்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது மிக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement