- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த நேரத்தில் சிரிச்சுடுங்க.. புதிய பயிற்சியாளர் கெளதம் கம்பீருக்கு ஜாம்பவான் டிராவிட் நெகிழ்ச்சியான வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஆலோசகராகவும் கேப்டனாகவும் ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவத்தை கொண்டுள்ளார். அதனால் ஓய்வு பெற்ற ஜாம்பவான் ராகுல் டிராவிட்டுக்கு பின் கௌதம் கம்பீர் இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு ஓய்வு பெற்ற முன்னாள் பயிற்சியாளர் ஜாம்பவான் ராகுல் ட்ராவிட் வாழ்த்து மெசேஜ் தெரிவித்துள்ளார். குறிப்பாக எவ்வளவு கடினமான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை ஒரு சிரிப்பால் சரி செய்து விடுங்கள் என்று அவருக்கு டிராவிட் ஆலோசனையும் தெரிவித்துள்ளார். இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் ராகுல் டிராவிட் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

வாழ்த்திய டிராவிட்:
“ஹலோ கௌதம். இந்திய அணியின் பயிற்சியாளராக நமது உலகின் அற்புதமான பணிக்கு உங்களை வரவேற்கிறோம். எனது கனவுகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இந்திய அணியுடன் எனது பணியை முடித்து 3 வாரங்கள் ஆகின்றன. பார்படாஸ் மற்றும் மும்பையில் சில மறக்க முடியாத நாட்கள் எனக்கு அமைந்தன”

“எல்லாவற்றிக்கும் மேலாக இந்திய அணியுடன் என் காலத்தில் நான் செய்த நினைவுகளையும் நட்பையும் பொக்கிஷமாக வைத்திருப்பேன். இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கும் உங்களுக்கும் அதையே விரும்புகிறேன். உங்களுக்கு முழுவதுமாக ஃபிட்டாக உள்ள வீரர்கள் அனைத்து அணிகளிலும் கிடைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அதற்காக வாழ்த்துகிறேன்”

- Advertisement -

“உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். இந்திய கிரிக்கெட்டைப் பற்றி நீங்கள் எந்தளவுக்கு அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தை கொண்டவர் என்பதை நான் அறிவேன். எனவே இந்த வேலையில் நீங்கள் அனைத்து தரத்தையும் கொண்டு வருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு பயிற்சியாளராக மற்றொரு பயிற்சியாளரான உங்களுக்கு ஒரு கடைசி விஷயத்தை சொல்கிறேன்”

இதையும் படிங்க: இங்கிலாந்து வீரரின் பரிந்துரையின் பேரில் இங்கிலாந்து செல்லவிருக்கும் வெங்கடேஷ் ஐயர் – எதற்கு தெரியுமா?

“அனல் பறக்கும் சூடான நேரங்களில் மூச்சை வெளியே விடுங்கள். அது போன்ற நேரங்களில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் ஒரு படி பின் வாங்கி சிரித்து விடுங்கள். வேறு என்ன நடந்தாலும் அது மக்களை ஆச்சரியமடைய வைக்கும். கௌதம் நீங்கள் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். நீங்கள் இந்திய அணியை இன்னும் பெரிய உயரத்திற்கு கொண்டு செல்வீர்கள் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -