அதைப்பத்தியெல்லாம் பேச இது நேரம் இல்ல. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து – ராகுல் டிராவிட் பேசியது என்ன?

Dravid
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையின் முதலாவது அரையிறுதி போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது. அதனை தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரண்டாவதாக இன்று அடிலெயிடு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

ENg vs IND Jos Buttler Alex hales

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பாகிஸ்தான அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டிருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை குவிக்கவே 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கினை மிகச் சுலபமாக துரத்திய இங்கிலாந்து அணியானது 16 ஓவர்களிலேயே விக்கெட் எதுவும் இழக்காமல் 170 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, அஷ்வின், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகியோரது எதிர்காலம் குறித்தும், அவர்களது ஓய்வு குறித்தும் இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

Virat Kohli Suryakumar Yadav.jpeg

எப்பொழுதுமே இதுபோன்ற பெரிய தொடர்களில் இந்திய அணி தோல்வி அடையும்போது சீனர்கள் வீரர்கள் குறித்த விமர்சனங்கள் அதிக அளவு எழும். அந்த வகையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இனியும் தேவையா? என்ற கேள்வி ராகுல் டிராவிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டிராவிட் கூறுகையில் :

- Advertisement -

இந்த தொடரில் நாம் செய்த தவறுகளை மேம்படுத்திக் கொண்டு அடுத்த உலகக் கோப்பைக்காக தயாராக வேண்டும். இந்த தொடரில் நாம் சிறப்பாகவே பேட்டிங் செய்து வந்தோம். ஆனால் அரையிறுதி போட்டியில் நம்மால் வெற்றியை தாண்ட முடியாதது வருத்தம் தான் இருந்தாலும் இதில் உள்ள குறைகளை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர தனிப்பட்ட வீரர்களை குறித்து நாம் யோசிக்க கூடாது. மூத்த வீரர்களின் எதிர்காலம் குறித்து இப்போது பேசுவது சரியாக இருக்காது.

இதையும் படிங்க : நான் இப்படி நடக்கும்னு நெனச்சி கூட பாக்கல. இது ரொம்ப ஸ்பெஷல் – ஆட்டநாயகன் அலெக்ஸ் ஹேல்ஸ் பேட்டி

மேலும் அதைப்பற்றி சிந்திக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் நம்மிடம் கால அவகாசம் இருக்கிறது. எனவே இதைப்பற்றி தற்போது சிந்திக்கவோ, பேசவோ இது சரியான நேரம் கிடையாது. அடுத்த உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் அணியில் என்னென்ன மாற்றங்கள் வேண்டுமோ அது வரும் காலங்களில் நிகழ்த்தப்படும் என விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து டிராவிட் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement