நான் இப்படி நடக்கும்னு நெனச்சி கூட பாக்கல. இது ரொம்ப ஸ்பெஷல் – ஆட்டநாயகன் அலெக்ஸ் ஹேல்ஸ் பேட்டி

Alex-Hales
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பைத் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய நான்கு அணிகளில் ஏற்கனவே நியூசிலாந்தை வென்று பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வேளையில் இரண்டாவதாக இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பாகிஸ்தானுடன் இறுதிப் போட்டியில் விளையாடும் என்பதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈர்த்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தானுடன் இறுதி போட்டியில் மோத இருக்கிறது.

ENg vs IND Jos Buttler Alex hales

- Advertisement -

அதன்படி இன்று அடிலெயிடு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவிக்கவே 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த சவாலான இலக்கினை இங்கிலாந்து அணி சற்று கடினப்பட்டே எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் :

இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் எந்த ஒரு சிரமமும் இன்றி இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்து வெறும் 16 ஓவர்களிலேயே விக்கெட் ஏதும் இழக்காமல் 170 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றனர். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக துவக்க வீரர் பட்லர் 80 ரன்களையும், அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்களையும் குவித்து அசத்தினர். அதிலும் குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் இருந்தே மிகச் சிறப்பான அதிரடியை வெளிப்படுத்திய அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளை சந்தித்த வேளையில் 4 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 86 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

Alex Hales 1

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த வெற்றி குறித்தும் தனது தனிப்பட்ட பேட்டிங் குறித்தும் பேசிய அலெக்ஸ் ஹேல்ஸ் கூறுகையில் : இந்த போட்டி எனக்கு மிகப் பெரிய போட்டியாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்தியா போன்ற பலமான ஒரு அணியை அதுவும் உலகக்கோப்பை அரையிறுதியில் வீழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நான் விளையாடிய விதம் இன்று எனக்கு மிகவும் திருப்தி அளித்தது.

- Advertisement -

என்னை பொறுத்தவரை இந்த அடிலெயிடு மைதானம் பவர்பிளே ஓவர்களில் விளையாடுவதற்கு மிக ஏதுவான ஒரு மைதானம். அதோடு இந்த மைதானம் பேட்டிங்க்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்பதனால் இந்த மைதானத்தின் தன்மையை நான் அற்புதமாக பயன்படுத்திக் கொண்டதாக நினைக்கிறேன். ஏற்கனவே இந்த மைதானத்தில் எனக்கு ஏகப்பட்ட சிறப்பான இன்னிங்ஸ்கள் இருந்த வேளையில் அதையெல்லாம் தாண்டி இந்த ஒரு இன்னிங்ஸ் எனது மறக்க முடியாத இன்னிங்ஸ்ஸாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : 2014 முதல் தொடரும் முடிவில்லா சோகம் – தோல்வியால் கண்ணீர் விட்ட ரோஹித் சர்மா – ட்ராவிட், ரசிகர்கள் சோகம்

நான் இங்கிலாந்து அணிக்காக மீண்டும் ஒருமுறை உலக கோப்பையில் விளையாடுவேன் என்று நினைத்து கூட பார்த்தது கிடையாது. ஆனால் தற்போது எனக்கு வாய்ப்பு கிடைத்து அந்த வாய்ப்பினை நான் சரியாக பயன்படுத்தியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆஸ்திரேலிய நாட்டில் நான் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன். இன்றைய இரவு என்னுடைய இரவாக அமைந்துள்ளது. என்னுடைய கரியரில் இன்று மிகச் சிறப்பான நாள் என்று தான் நினைப்பதாக அலெக்ஸ் ஹேல்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement