சஞ்சு சாம்சன் எப்போது ராஜஸ்தான் அணிக்கு திரும்புவார்? ராகுல் டிராவிட் கொடுத்த அப்டேட் – விவரம் இதோ

Samson Dravid
- Advertisement -

கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது ஒரு மாதத்தை கடந்து பாதி போட்டிகளை நிறைவு செய்துள்ளது. அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் தற்போதைய நிலையில் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்து வலுவான நிலையில் உள்ளன.

சஞ்சு சாம்சன் எப்போது அணிக்கு திரும்புவார்? : ராகுல் டிராவிட்

அதேவேளையில் இந்த தொடரில் பங்கேற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடிய எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் நீடிக்கிறது. அதைத் தொடர்ந்து இன்று ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற இருக்கும் மிக முக்கிய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியின் போது லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய சஞ்சு சாம்சன் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய வேளையில் மீண்டும் இன்றைய போட்டிக்கான அணிக்கு திரும்புவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது ராஜஸ்தான் அணி இக்கட்டான நிலையில் இருக்கும் வேளையில் இனி ஒரு போட்டியில் தோற்றால் கூட அந்த அணியின் பிளே ஆப் வாய்ப்பு கடினமாகிவிடும்.

இதன் காரணமாக சஞ்சு சம்சான் விரைவில் அணிக்கு திரும்புவது முக்கியம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சஞ்சு சாம்சனின் உடற்தகுதி குறித்து பேசியுள்ள அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் கூறுகையில் : டெல்லி அணிக்கெதிரான போட்டியிலேயே சஞ்சு சாம்சனுக்கு சில பிரச்சனைகள் இருந்தது என்பதை கணித்தேன். அதன் காரணமாகவே அந்த போட்டியில் அவரை விளையாட அனுமதிக்கவில்லை.

- Advertisement -

அதேபோன்று இனிவரும் போட்டிகளிலும் அவர் உடற்தகுதியின் அடிப்படையில் தான் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது தெரியவரும். ஏனெனில் மேலும் அவர் பயணம் செய்தால் அதிக ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவக்குழு கூறியுள்ளது. எனவே அவரை அதிகமாக பயணிக்க வைக்காமல் சிகிச்சை அளித்து விரைவில் அணிக்கு திரும்ப கொண்டுவர முயற்சிப்போம்.

இதையும் படிங்க : அதை விட்டுட்டு வரத் தயாரா இருக்கேன்.. ஐபிஎல் தொடரில் எனக்கு வாய்ப்பு கொடுங்க.. பாக் வீரர் அமீர் கோரிக்கை

ஆனால் அதற்கு எத்தனை நாட்கள் ஆகும்? என்கிற கணக்கு எங்களிடம் இல்லை என்பதனால் அவர் எப்போது கம்பேக் கொடுப்பார் என்பதை உறுதியாக கூற முடியாது. ஆனாலும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து அவரை விரைவில் அணிக்குள் கொண்டு வருவோம் என்று டிராவிட் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் மேலும் சில போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement