முதல் 2 போட்டிகளில் அவரு ஆடாததும் நமக்கு ஒருவகையில் நல்லது தான் – ராகுல்டிராவிட் அளித்த பேட்டி

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நாளை மறுதினம் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்க உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற இருக்கும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இரு அணிகளுக்குமே மிக முக்கியத்துவம் வாய்ந்த தொடராக பார்க்கப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்த வேளையில் இந்த அணியில் இருந்து நட்சத்திர அனுபவ வீரரான விராத் கோலி தனிப்பட்ட காரணங்களால் முதல் இரண்டு போட்டியிலுமிருந்து விலகியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக விராட் கோலி இடத்தில் களமிறங்கி விளையாடப்போவது யார்? என்ற கேள்வியும் அதிகரித்துள்ளது.

அதே வேளையில் விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் டிராவிட் ஆகிய இருவரிடம் கலந்து பேசி முடிவெடுத்த பின்னரே தனது குடும்பத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று கூறி முதல் 2 போட்டியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலியின் இந்த விலகல் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் கூறுகையில் :

- Advertisement -

விராட் கோலி போன்ற ஒரு தரமான வீரரை இந்திய அணி தற்போது இழந்துள்ளது சற்று பின்னடைவு தான். ஏனெனில் அவர் ஒரு அற்புதமான வீரர் ஆனால் அவர் தற்போது அணியில் இல்லாததும் ஒரு நல்ல விடயம் தான். ஏனெனில் அவருக்கு பதிலாக வேறு யாரையாவது அந்த இடத்தில் பயன்படுத்தி அவர்களது செயல்பாட்டை முன்னேற்ற இந்த போட்டிகள் கொஞ்சம் உதவியாக இருக்கும்.

இதையும் படிங்க : அவங்களை அடித்து நொறுக்கியது போல் இந்தியாவிலும் ஆடுவோம்.. இங்கிலாந்து வீரர் மார்க் வுட் நம்பிக்கை

அந்த வகையில் விராட் கோலியின் இடத்தில் மற்றொரு வீரர் விளையாடி அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் விராட் கோலிக்கு தற்போது எங்களால் உதவ முடியாத சூழலில் இருப்பதால்தான் அவர் இந்த இரண்டு போட்டிகளில் விளையாட முடியவில்லை என ராகுல் டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement