டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் அறிமுகமானது இப்படித்தான். 26 ஆண்டுகால சுவாரசியத்தை – பகிர்ந்த ராகுல் டிராவிட்

Dravid
- Advertisement -

இந்தியா கண்டெடுத்த மகத்தான வீரர்களில் ஒருவரான ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக கடந்த 1996 ஆம் ஆண்டு அறிமுகமாகி 2012 வரை இந்திய அணிக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,288 ரன்களையும், 344 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10889 ரன்களையும், ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடி 31 ரன்களையும் குவித்துள்ளார். வரலாறு கண்டெடுத்த மகத்தான வீரர்களில் ஒருவராக திகழும் ராகுல் டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை 52.31% ஆவரேஜ் உடன் 13288 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.

Dravid 1

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட்டை காட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாம்பியன் பிளேயராக தான் ஓய்வு பெறும் வரை திகழ்ந்த ராகுல் டிராவிட் தற்போது முதல் முறையாக தான் எவ்வாறு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகினேன் என்பது குறித்து பேசியுள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அசாருதீன் தலைமையிலான இந்திய அணியில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பிடித்திருந்த ராகுல் டிராவிட் மற்றும் கங்குலி ஆகியோர் அந்த தொடரின் இரண்டாவது போட்டியின் போது லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுகமாகினர்.

அந்த அறிமுக போட்டியில் சிறப்பாக விளையாடிய கங்குலி சதம் அடித்து அசத்தியிருந்தார். அதே வேளையில் ராகுல் டிராவிட் 95 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து சதத்தை தவற விட்டிருந்தார். இந்நிலையில் தான் 26 ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகினேன் என்பது குறித்து தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் கூறுகையில் :

Sourav Ganguly

நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானது நேற்று நடந்தது போன்று இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது. அந்த வகையில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த அசாருதீன் போட்டிக்கு முன்னதாக சஞ்சய் மஞ்சரேக்கருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்து டாஸ் போடுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே என்னிடம் வந்து நீ இந்த போட்டியில் அறிமுகமாகிறாய் தயாராக இரு என்று கூறிவிட்டு சென்றார்.

- Advertisement -

உடனடியாக நான் அந்த போட்டிக்காக தயாராகினேன். அதிர்ஷ்டவசமாக அந்த போட்டியில் நாங்கள் டாசை இழந்ததால் முதலில் பீல்டிங் செய்யவே நேர்ந்தது. எனவே நான் பேட்டிங்கிற்கு என்னை தயார் படுத்திக்கொள்ள கொஞ்சம் நேரமும் கிடைத்தது. அதன்படி அந்த அறிமுக வாய்ப்பை பெற்ற நான் சிறப்பாக விளையாடி அந்த போட்டியில் 95 ரன்கள் குவித்தேன்.

இதையும் படிங்க : IND vs WI : இரண்டாவது டி20 போட்டிக்கான அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலா அவரை சேருங்க – ரசிகர்கள் வேண்டுகோள்

அதே வேளையில் என்னுடன் அறிமுகமான சவுரவ் கங்குலி சதம் அடித்தார் என்றும் தனது நினைவுகளை ராகுல் டிராவிட் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தூணாக இருந்த அவருக்கு ரசிகர்கள் மத்தியில் சுவர் (The Wall) என்ற பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement