IND vs WI : இரண்டாவது டி20 போட்டிக்கான அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலா அவரை சேருங்க – ரசிகர்கள் வேண்டுகோள்

Shreyas-iyer
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவதாக பங்கேற்று விளையாடியது. அந்த ஒருநாள் தொடரை மூன்றுக்கும் பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் அடுத்ததாக தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியானது விளையாடி வருகிறது.

INDvsWI

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இன்று இரண்டாவது டி20 போட்டியில் விளையாட இருக்கிறது. ஏற்கனவே முதல் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால் இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் பெரிதளவு மாற்றங்கள் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் டக் அவுட்டான ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக தொடர்ச்சியாக தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தீபக் ஹுடாவிற்கு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் மத்தியிலும் சரி, ரசிகர்கள் மத்தியிலும் சரி வேண்டுகோள் எழுந்துள்ளது.

Deepak Hooda 104

ஏனெனில் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரின் போது சதம் விளாசி அசத்திய தீபக் ஹூடா அடுத்தடுத்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக அவரை விளையாட வைக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

- Advertisement -

அதேபோன்று ஷார்ட் பிட்ச் பந்தில் பலவீனமாக இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியாக அதே போன்ற பந்துகளில் ஆட்டம் இழந்து வருவதால் அதனை சமாளித்து விளையாடும் தீபக் ஹூடாவிற்கு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற வகையிலும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

இதையும் படிங்க : IND vs WI : இன்றைய 2 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பது மட்டுமின்றி தீபக் ஹூடா பகுதி நேர பந்துவீச்சாளராகவும் செயல்படுவதால் அவருக்கு வாய்ப்பினை வழங்கினால் அது தவறில்லை என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Advertisement