IND vs WI : இன்றைய 2 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

Indian-Team
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

INDvsWI

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

அந்த வகையில் இந்திய அணியில் இன்றைய போட்டியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்படலாம் என்று தெரிகிறது. அதன்படி கடந்த சில தொடர்களாகவே டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் செய்ய தடுமாறி வரும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் அல்லது தீபக் ஹூடா ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது.

Shreyas Iyer IND vs WI

மற்றபடி முதல் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதனால் அணியில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது. அதேபோன்று பந்துவீச்சாளர்கள் வரிசையிலும் எந்த மாற்றமும் நிகழாது.

- Advertisement -

5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கும் வேளையில் இன்றைய இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற முனைப்பு காட்டும். அதன்படி இன்றைய இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : மகத்தான கேப்டன் தோனி தலைமையில் நல்ல வாய்ப்புகளை பெற்று ஜொலிக்க தவறிய 6 வீரர்களின் பட்டியல்

1) ரோஹித் சர்மா, 2) சூரியகுமார் யாதவ், 3) சாம்சன்/தீபக் ஹூடா, 4) ரிஷப் பண்ட், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தினேஷ் கார்த்திக், 7) ரவீந்திர ஜடேஜா, 8) புவனேஷ்வர் குமார், 9) அஷ்வின், 10) அர்ஷ்தீப் சிங், 11) ரவி பிஷ்னோய்

Advertisement