- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ராகுல் டிராவிடின் வாழ்க்கையை மையமாக வைத்து பயோபிக் திரைப்படம் எடுத்தால் யார் ஹீரோ – அவரே அளித்த பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கடந்த 1996-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2012 ஆம் ஆண்டு வரை 164 டெஸ்ட் போட்டிகள், 344 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி உள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 2008 முதல் 13 வரை 89 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

திரைப்படமாகும் டிராவிட் வாழ்க்கை :

அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணிபுரிந்து வந்த அவரது தலைமையின் கீழ் இந்திய அணி நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

- Advertisement -

இப்படி இரண்டாவது முறையாக இந்திய அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றிய கையோடு ராகுல் டிராவிட் தனது பதவியில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து தற்போது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட்டு வரும் அவர் அப்போது தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் மும்பையில் நடைபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு விழாவில் கலந்து கொண்ட டிராவிட் அங்கு கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு சுவாரசியமான பதிலை வழங்கினார். அதிலும் குறிப்பாக ராகுல் டிராவிடின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் எடுக்கப்பட்டால் அதில் எந்த நடிகரை உங்களது கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

- Advertisement -

அதற்கு சிரித்தபடி பதிலளித்த டிராவிட் “நல்ல சம்பளம் கொடுத்தால் நானே எனது பயோபிக்கில் நடித்து விடுகிறேன்” என்று தெரிவித்தார். அவரது இந்த இயல்பான பதிலால் அரங்கம் முழுவதும் சிரிப்பொலி ஆழ்ந்தது. தொடர்ந்து பேசிய டிராவிட் நாடு முழுவதும் சென்று அனைத்து ரசிகர்களின் மகிழ்ச்சியும், ஆர்வத்தையும் நேரில் அனுபவிக்க விரும்புவதாகும் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இது கூடவா தெரியாது? இலங்கை மாதிரி ஒரு டீமை என்னோட வாழ்நாளில் பாத்ததில்ல.. மார்க் பட்சர் விமர்சனம்

தற்போது ஓய்வில் இருந்து வரும் டிராவிட் அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக வருவதற்கான பேச்சுவார்தைகளை அந்த அணியின் நிர்வாகம் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -