இது கூடவா தெரியாது? இலங்கை மாதிரி ஒரு டீமை என்னோட வாழ்நாளில் பாத்ததில்ல.. மார்க் பட்சர் விமர்சனம்

Mark Butcher
- Advertisement -

ஆகஸ்ட் 21ஆம் தேதி மான்செஸ்டர் துவங்கிய இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 236 மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அதிகபட்சமாக கேப்டன் தனஞ்செயா டீ சில்வா 74, மிலன் ரத்நாயகே 72 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர், கிறிஸ் ஓக்ஸ் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் சதமடித்து 11 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசித்தா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை 3வது நாள் முடிவில் 204/6 ரன்களுடன் எடுத்து தடுமாறி வருகிறது.

- Advertisement -

மோசமான அணி:

தற்போது 82 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ள இலங்கை இப்போட்டியில் வெற்றி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. முன்னதாக அப்போட்டியில் 2வது நாளின் கடைசி ஓவரை இலங்கையின் அசிதா பெர்னான்டோ வீசினார். எனவே 3வது நாளின் முதல் ஓவரை அவர் வீச முடியாது என்பது விதிமுறையாகும். ஆனால் அந்த விதிமுறை தெரியாத இலங்கை கேப்டன் டீ சில்வா 3வது நாளின் முதல் ஓவரை அவரிடம் வழங்கினார்.

அதற்கு அம்பயர் அனுமதி வழங்காததால் வேறு வழியின்றி ஸ்பின்னரான பிரபத் ஜெயசூர்யாவை வைத்து முதல் ஓவரை போட வேண்டிய பரிதாபத்துக்கு இலங்கை தள்ளப்பட்டது. இந்நிலையில் அந்த அடிப்படை விழிப்புணர்வு கூட இல்லாத இலங்கையை போன்ற ஒரு மோசமான அணியை தாம் பார்த்ததில்லை என முன்னாள் கிரிக்கெட் இங்கிலாந்து வீரர் மார்க் பட்சர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

இது கூடவா தெரியாது:

“இன்றைய இலங்கை அணியை போல் ஒரு தொழில்முறை டெஸ்ட் அணி எப்படி தயாராக இல்லாமல் இருக்க முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் அதைப் பற்றிய ஐடியா கேப்டனுக்கு மட்டுமின்றி அவர்களுடைய பயிற்சியாளர்களுக்கும் இல்லை. இன்று காலை அவர்கள் இங்கிலாந்துக்கு எதிராக கடினமாக முயற்சிக்க எந்த வழியையும் உருவாக்காமலேயே களத்திற்கு எப்படி வந்தார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை”

“என்னுடைய வாழ்க்கையில் இது போன்ற சூழ்நிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் உங்களுக்கு ஒரு நாளின் ஆட்டத்தை எப்படி சரியாகத் துவங்க வேண்டும் என்பது கூட தெரியவில்லை. அப்படி என்ன செய்கிறீர்கள்? 3வது நாள் என்பது மிகவும் முக்கியமான பெரிய நாள். முதல் 2 நாட்களில் நீங்கள் கடினமாக விளையாடி போராட்டம் குணங்களை காட்டியுள்ளீர்கள்”

இதையும் படிங்க: ஸ்கூல்ல கூட இப்படி சஸ்பென்ட் ஆனதில்ல.. அந்த பேட்டிக்கு அப்றம் மொத்தமா மாறிட்டேன்.. 2019 சர்ச்சை பற்றி ராகுல்

“அப்படி இருந்தும் 3வது நாளின் முதல் பந்தில் களத்தில் உங்களது அணியில் ஒவ்வொருவரும் என்ன செய்யப் போகிறார் என்பது எப்படி உங்களுக்கு தெரியாமல் போகலாம்? யார் பந்து வீசுவார், என்ன ஃபீல்டிங் வைக்கலாம், ஜேமி ஸ்மித்தை சாய்க்க என்ன திட்டத்தை பின்பற்றலாம் என்ற எதையுமே நீங்கள் செய்யாதது என்னை முழுமையாக ஆச்சரியப்படுத்துகிறது” என்று கூறினார்.

Advertisement