அவங்கள பத்தி பேசுற சரியான இடமும், நேரமும் இதுகிடையாது – ராகுல் டிராவிட் பிரஸ்மீட் டாக்

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று மதியம் செஞ்சூரியன் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்தப் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை பெற்றுள்ளது. ஏனெனில் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை என்கிற காரணத்தினால் நிச்சயம் இம்முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும் என்று ரசிகர்கள் நம்பி காத்திருக்கின்றனர்.

IND

- Advertisement -

மேலும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தென்னாபிரிக்க சென்றிருந்த இந்திய வீரர்கள் குவாரன்டைனை முடித்து தற்போது பயிற்சியையும் முடித்துள்ளனர். இந்நிலையில் இந்த தொடர் குறித்து காணொளி வாயிலாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் விராட் கோலியின் பதவி நீக்கத்தால் அவருக்கும் கங்குலிக்கும் இடையே மோதல் இருப்பதாக அண்மைக்காலமாகவே நிறைய செய்திகள் வெளியாகி வருகின்றன. அதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு டிராவிட் பதிலளிக்கையில் கூறியதாவது : உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் தேர்வாளர்களின் முடிவின்படி தான் கேப்டன்சி மாற்றம் நடைபெற்றிருக்கும் ஆனால் அது குறித்து பேச இது சரியான இடமும் கிடையாது, சரியான நேரமும் கிடையாது. தற்போது உள்ள இந்நேரத்தில் இந்த தொடரில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

Ganguly

இந்நேரத்தில் அணிக்குள் நாங்கள் எதை பேசிக்கொள்கிறோம்? என்ன நடக்கிறது? என்பதை தெளிவாக கூற முடியாது என்று கூறினார். மேலும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி குறித்து பேசுகையில் ரஹானே மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரில் யாருக்கு இடம்? ரவீந்திர ஜடேஜா அணியில் இல்லாததால் அந்த இடத்தை எவ்வாறு சரிசெய்வது? ஐந்து பவுலர்களுடன் களமிறங்குவதா? அல்லது கூடுதலாக பேட்ஸ்மேன் உடன் களம் இறங்குவதா போன்ற கேள்விகளுக்கு பதிலளித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் டெஸ்ட் போட்டியில் ஜெயிக்கப்போவது யார்? இந்தியாவா? தென்னாப்பிரிக்காவா? – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

இது குறித்து பேசிய டிராவிட் : ரஹானே தற்போது பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் அணியின் காம்பினேஷனில் இருப்பது நல்லதுதான். அணியில் வீரர்களை சேர்ப்பதோ, நீக்குவதோ போட்டியின் முன்னர் தான் தெரியவரும். முன்கூட்டியே அறிவித்து யாரையும் வருத்தமடையச் செய்யக்கூடாது என்று டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement