முதல் டெஸ்ட் போட்டியில் ஜெயிக்கப்போவது யார்? இந்தியாவா? தென்னாப்பிரிக்காவா? – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை என்கிற காரணத்தினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த பல தொடர்களாகவே விராட்கோலி தலைமையிலான இந்திய அணி அயல்நாட்டில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருவதால் நிச்சயம் இம்முறை தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும் என்று அனைவரும் கூறிவருகின்றனர்.

Kohli

- Advertisement -

நாளை நடைபெற உள்ள இந்த முதல் டெஸ்ட் போட்டி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி குறித்த தனது கணிப்பை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த தொடரானது நிச்சயம் நம் அனைவருக்குமே சுவாரசியம் தரக்கூடிய ஒன்றாக அமையும். ஏனெனில் தற்போதைய நிலையில் இரு அணிகளும் சரியான அளவில் சம பலத்துடன் இருப்பதனால் இந்த தொடரில் அனைத்து போட்டிகளுமே ஒரு நெருக்கமான போட்டியாகவே இருக்கும்.

Olivier

என்னைப்பொறுத்தவரை முதலாவது போட்டியில் இந்திய அணிக்கு 49 சதவீதமும், தென்னாப்பிரிக்கா அணிக்கு 51 சதவீதமும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று கருதுகிறேன். இந்த போட்டியில் ஒருவேளை ஒரு அணி வெற்றி பெறுமெனில் அது தென்னாபிரிக்க அணியாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர்களது சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் அவர்கள் ஆதிக்கத்தை செலுத்த நினைப்பார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : 1983 உலககோப்பையை கருவாக வைத்து தயாரிக்கப்பட்ட 83 படம் எப்படி இருக்கு? – முழு விமர்சனம் இதோ

அதுமட்டுமின்றி தென்ஆப்பிரிக்க அணியில் அதிவேகமாக பந்து வீச கூடிய பவுலர்கள் இருப்பதனால் நிச்சயம் அவர்களுக்கு இங்கு கூடுதல் அனுகூலம் கிடைக்கும் என்றும் இந்திய அணியில் சில வீரர்கள் ஃபார்மில் இல்லாதது கவலை அளிப்பதாகவும் ஆகாஷ் சோப்ரா வெளிப்படையாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement