உங்க கைல இருக்கு.. அதை செய்யலான சான்ஸ் தரமாட்டோம்.. இஷான் கிஷானை மறைமுகமாக எச்சரித்த டிராவிட்

Rahul Dravid
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தக்க பதிலடி கொடுத்து 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் கேஎஸ் பரத் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.

அதில் விக்கெட் கீப்பிங் செய்வதில் நன்றாகவே செயல்பட்ட அவர் பேட்டிங்கில் இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறி வருகிறார். எனவே அவரை நீக்கலாம் என்று பார்த்தால் அதற்குத் தகுந்த மாற்று கீப்பர் தற்போதைய அணியில் இல்லை. குறிப்பாக அவருக்கு அடுத்தபடியாக ஓரளவு நல்ல அனுபவத்தை கொண்ட இசான் கிசான் கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று சொல்லி சொந்த காரணங்களுக்காக விலகினார்.

- Advertisement -

டிராவிட் எச்சரிக்கை:
அதிலும் குறிப்பாக குடும்பத்துடன் நேரத்தை செலவிட அனுமதி வேண்டும் என்று பிசிசிஐயிடம் சொல்லிவிட்டு அணியிலிருந்து வெளியேறிய அவர் அதை செய்யாமல் துபாயில் 2024 புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதனால் அதிருப்தியடைந்த பிசிசிஐ சமீபத்திய ஆப்கானிஸ்தான் டி20 தொடரிலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு கொடுக்காமல் கழற்றி விட்டதாக செய்திகள் வெளியாகின.

இருப்பினும் அதற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இஷான் கிசான் தற்போது ஓய்வில் இருப்பதாலேயே இங்கிலாந்து தொடரில் தேர்வாகவில்லை என்று ராகுல் டிராவிட் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் மீண்டும் தேர்வாக வேண்டுமெனில் அதற்கு இசான் கிசான் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி ஃபார்முக்கு திரும்பி கம்பேக் கொடுக்க வேண்டும் என்று மறைமுகமாக எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அனைவரும் அணிக்கு திரும்புவதற்கு வழி உள்ளது. இசான் கிசான் பற்றி நான் தொடர்ந்து சொல்ல விரும்பவில்லை என்னால் முடிந்த வரை விளக்க முயற்சித்தேன். அவர் இடைவெளியை கோரியிருந்தார். அதைக் கொடுத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எனவே அவர் தயாராகும் போது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன்”

இதையும் படிங்க: 38 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்த்தப்பட்ட தரமான சம்பவம்.. வரலாற்றில் இடம்பிடித்த ஜஸ்ப்ரீத் பும்ரா – விவரம் இதோ

“இருப்பினும் அவர் மீண்டும் விளையாட வரும் போது ஏதாவது கிரிக்கெட்டில் விளையாடி கம்பேக் கொடுக்க வேண்டும். எனவே முடிவு அவருடைய கையில் இருக்கிறது. நாங்கள் அவரை எதையும் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை” என்று கூறினார். அத்துடன் தடுமாற்றமாக செயல்பட்டு வரும் கேஎஸ் பரத் இன்னும் இளம் வீரராகவே இருப்பதால் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்போம் என்றும் ராகுல் டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement