38 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்த்தப்பட்ட தரமான சம்பவம்.. வரலாற்றில் இடம்பிடித்த ஜஸ்ப்ரீத் பும்ரா – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது. மேலும் தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்த இந்திய அணியானது இந்த வெற்றியின் மூலம் சிறப்பான கம்பேக் கொடுத்து அசத்தியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் தற்போது இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வைக்கின்றன.

- Advertisement -

அந்த வகையில் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார்.

குறிப்பாக இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 45 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த பும்ரா இரண்டாவது இன்னிங்ஸிலும் 46 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

- Advertisement -

இப்படி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 99 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்ச்சியுள்ளார். அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கெதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : வித்யாச சைகையுடன் பென் ஸ்டோக்ஸ் அவுட்டாக்கி.. வெறித்தனமாக கொண்டாடிய ஸ்ரேயாஸ் ஐயர்.. பின்னணி என்ன?

இவருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சேத்தன் சர்மா கடந்த 1986-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 118 ரன்களை விட்டுக் கொடுத்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அவருக்கு அடுத்து தற்போது பும்ரா 91 ரன்களை விட்டுக் கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement