நாங்க வேணும்னு செய்யல.. அது எங்க வேலையும் இல்ல.. சௌரவ் கங்குலிக்கு கோச் டிராவிட் பதில்

Rahul Dravid and Ganguly
- Advertisement -

தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து சொந்த மண்ணில் அவ்வளவு எளிதாக வீழ்ந்து விட மாட்டோம் என்பதை நிரூபித்துள்ளது.

முன்னதாக சமீப காலங்களாகவே இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் வெல்வதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைப்பதாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர். அதற்கு உங்களுடைய நாட்டில் வேகத்துக்கு சாதகமான மைதானங்கள் இருப்பது இயற்கை? எங்களுடைய நாட்டில் சுழலுக்கு சாதகமான மைதானம் இருந்தால் செயற்கையா? என்று இந்தியர்கள் பதிலடி கொடுத்த வருகின்றனர்.

- Advertisement -

கங்குலிக்கு பதில்:
இருப்பினும் 2023 பார்டர் – காபாஸ்கர் கோப்பையில் இந்தூர் மைதானமும் 2023 உலகக் கோப்பை ஃபைனலில் அகமதாபாத் மைதானமும் சுழலுக்கு சாதகமாக இருந்தது கடைசியில் இந்தியாவுக்கே தோல்வியை கொடுத்தது. அந்த வரிசையில் இத்தொடரின் முதல் போட்டியில் 4வது நாளில் சுழலுக்கு சாதகமாக மாறிய ஹைதராபாத் பிட்ச்சில் வெறும் 231 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் இந்தியா பரிதாபமாக தோற்றது.

அப்போது பும்ரா, சிராஜ், ஷமி, அஸ்வின், அக்சர், ஜடேஜா போன்ற தரமான பவுலர்கள் எந்த வகையான மைதானத்திலும் 20 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவிற்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி ட்விட்டரில் பதிவிட்டார். எனவே வருங்காலங்களில் நாம் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் விளையாட வேண்டிய அவசியமில்லை என்று பிசிசிஐ மற்றும் இந்திய அணிக்கு கங்குலி கோரிக்கை வைத்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவருக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளது பின்வருமாறு. “பிட்ச்களை மைதான பராமரிப்பாளர்கள் தான் உருவாக்குகின்றனர். நாங்கள் அதை சுழலுக்கு சாதகமாக அமையுங்கள் என்று கேட்பதில்லை. பொதுவாகவே இந்தியாவில் மைதானங்கள் சுழலும். இருப்பினும் அது எவ்வளவு, எப்படி சுழலும் என்பது எனக்கு தெரியாது. நான் வல்லுனர் அல்ல. இந்தியாவில் உள்ள மைதானங்களில் 4 அல்லது 5 நாட்கள் வரை போட்டி செல்லும்”

இதையும் படிங்க: உங்க கைல இருக்கு.. அதை செய்யலான சான்ஸ் தரமாட்டோம்.. இஷான் கிஷானை மறைமுகமாக எச்சரித்த டிராவிட்

“சில நேரங்களில் அது மூன்றாவது நாளில் சுழலும் என்று என்னிடம் கூறுவார்கள். ஆனால் அது முதல் நாளிலேயே சுழலும். எனவே மற்றவர்களை போல நானும் சில நேரங்களில் மைதானங்களைப் பற்றி புரிந்துகொள்ள முடியாமல் இருப்பேன். பொதுவாக நாங்கள் மைதானத்தை பார்த்து விட்டு வெற்றி பெறுவதற்கு தேவையான வேலையை செய்வோம். அந்த வரிசையில் ராஜ்கோட் நகருக்கு சென்று அடுத்த போட்டியில் எம்மாதிரியான மைதானத்தில் விளையாடுவோம் என்பதை பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement