தம்மையே திணறடித்த இளம் வீராங்கனைகளுக்கு.. ஜாம்பவான் டிராவிட் கொடுத்த வேற லெவல் பாராட்டு

Rahul Dravid
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதே போல நிறைய அணி நிர்வாகங்கள் புதிய பயிற்சியாளர்களையும் நியமித்துள்ளன. அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களுடைய புதிய பயிற்சியாளராக ஜாம்பவான் ராகுல் டிராவிட்டை நியமனம் செய்துள்ளது.

ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் தலா 10000 ரன்கள் குவித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர் வரலாற்றில் மகத்தான பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். அதே போல பயிற்சியாளராக 2024 டி20 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து இந்தியா வெல்தற்கும் அவர் உதவினார். அந்த வெற்றியுடன் விடைபெற்ற டிராவிட் தற்போது தம்முடைய முன்னாள் ஐபிஎல் அணியான ராஜஸ்தான் அணியில் மீண்டும் பயிற்சியாளராக இணைந்துள்ளார்.

- Advertisement -

அசத்திய பெண்கள்:

இந்நிலையில் 2025 தொடரில் கோப்பையை வெல்வதற்கான வேலைகளை டிராவிட் இப்போதே ராஜஸ்தான் அணியுடன் துவங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் அணியின் அகடமியில் கிரிக்கெட்டை பயிலும் மாணவர்களுக்கு அவர் பயிற்சிகளை வழங்கினார். மேலும் ராயல்ஸ் கோப்பை என்ற பெயரில் நடைபெற்ற தொடரில் இளம் வீராங்கனைகளுடன் அவர் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.

அப்போது இளம் வீராங்கனைகள் வீசிய பந்துகளை டிராவிட் லாவகமாக எதிர்கொண்டார். அதே சமயம் சில வீராங்கனைகள் அவரையே திணறடிக்கும் அளவுக்கு அபாரமாக பந்து வீசினார்கள். அதில் தம்மால் அடிக்க முடியாத அளவுக்கு பந்து வீசிய ஒரு வீராங்கனைக்கு ராகுல் டிராவிட் பந்தை எதிர்கொண்ட பின் வேற லெவல் என்ற வகையில் கைதட்டி பாராட்டு தெரிவித்தார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

- Advertisement -

டிராவிட் பாராட்டு:

இறுதியில் அது பற்றி டிராவிட் பேசியது பின்வருமாறு. “இந்த இளம் வீராங்கனைகள் மிகவும் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புடன் விளையாடுவதை பார்க்கும் போது மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவின் வருங்காலம் ஒளிமயமாக இருக்கப் போவது எனக்கு தெரிகிறது. ராயல்ஸ் கோப்பை போன்ற தொடர் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு மட்டும் வழங்கவில்லை”

இதையும் படிங்க: ஜஸ்ட் மிஸ்.. விராட் கோலியும் நானும் இதை செஞ்சுருந்தா 2016லயே ஆர்சிபி கோப்பை ஜெய்ச்சுருக்கும்.. ராகுல் பேட்டி

“அவர்கள் பெரிய அளவில் கனவு கண்டு தன்னம்பிக்கையுடன் சாதிப்பதற்கான தளத்தையும் வழங்குகிறது. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு வாழ்த்துக்கள். அனைத்து வீராங்கனைகள் மற்றும் அவர்களின் உழைப்புக்கு பாராட்டுக்கள்” என்று கூறினார். மொத்தத்தில் 2008க்குப்பின் ராஜஸ்தான் கோப்பையை வெல்வதற்காக ராகுல் டிராவிட் இப்போதே அனைத்து வேலைகளையும் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement