ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி கோப்பையை இதுவரை ஒருமுறைப்பட வென்றதில்லை என்பது அந்த அணியின் நீண்ட கால ஏக்கமாக இருந்து வருகிறது. இத்தனைக்கும் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி தலைமையில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் விளையாடும் அந்த அணி லீக் சுற்றில் அசத்துவது வாடிக்கையாகும். ஆனால் முக்கியமான பிளே ஆஃப் சுற்றில் ஏதோ ஒரு வகையில் சொதப்பும் பெங்களூரு அணி வெறும் கையுடன் வெளியேறுவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
அதன் உச்சமாக 2016 ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையில் பெங்களூரு அட்டகாசமாக விளையாடி ஃபைனலுக்கு சென்றது. குறிப்பாக விராட் கோலி மட்டும் 973 ரன்கள் குவித்து தன்னுடைய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 208-7 ரன்கள் குவித்தது.
தவறிய கோப்பை:
அதிகபட்சமாக வார்னர் 69, யுவராஜ் 38, பென் கட்டிங் 39* ரன்கள் குவித்தார்கள். பின்னர் சேசிங் செய்த பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெயில் 76, விராட் கோலி 54 ரன்கள் விளாசி 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவர்களுக்குப் பின் வந்த ராகுல், ஏபி டீ வில்லியர்ஸ், ஷேன் வாட்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பெரிய ரன்கள் எடுத்த தவறினார்கள்.
அதனால் வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்ற பெங்களூரு கிரிக்கெட் அணி இதுவரை முதல் கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வருகிறது. இந்நிலையில் அந்தத் தோல்வி பற்றி கேஎல் ராகுல் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “2016 ஐபிஎல் ஃபைனல் பற்றி நானும் விராட் கோலி பலமுறை பேசுகிறோம். எங்கள் இருவரில் ஒருவர் இன்னும் கொஞ்ச நேரம் அதிகமாக விளையாடிருந்தால் நாங்கள் கோப்பையை வென்றிருப்போம்”
ஆர்சிபி கனவு:
“அந்த வருடத்தில் நாங்கள் மிகவும் ஸ்பெஷலான செயல்பாடுகளை வெளிப்படுத்தினோம். அதனால் சின்னசாமி மைதானத்தில் கோப்பையை வென்று கதையை மகிழ்ச்சியாக முடித்திருப்போம். ஆனால் துரதிஷ்டவசமாக அது நடைபெறவில்லை. 2016 சீசனில் பெங்களூரு அணியில் என்னுடைய நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிட்டேன்”
இதையும் படிங்க: பும்ராவை அந்த 2 ஆஸி பேட்ஸ்மேன்களும்.. நேதன் லையனை அவரும் விளாசுவாங்க.. வாகன், கில்கிறிஸ்ட் கணிப்பு
“பெங்களூரு என்னுடைய சொந்த ஊர். அங்குள்ள மக்கள் என்னை கனடா பையனாக வருகிறார்கள” என்று கூறினார். அந்த வகையில் 2016லயே ஆர்சிபி வெற்றி பெற வேண்டிய கோப்பை ஜஸ்ட் மிஸ்ஸில் தவறியதாக ராகுல் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதை அடுத்து 2025 தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் பெங்களூரு அணி மீண்டும் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.