பும்ராவை அந்த 2 ஆஸி பேட்ஸ்மேன்களும்.. நேதன் லையனை அவரும் விளாசுவாங்க.. வாகன், கில்கிறிஸ்ட் கணிப்பு

Adam Gilchrist
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ள பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல அந்த தொடரில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

அந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் பும்ராவுக்கு ஆஸ்திரேலியாவில் ட்ராவிஸ் ஹெட் பெரிய சவாலை கொடுத்து ரன்கள் குவிப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன கணித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பும்ராவுக்கு சவால்:

“கமின்ஸ் – கோலி ஆகியோருக்கு இடையேயான போட்டி உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும். ட்ராவிஸ் ஹெட்டுக்கு எதிராக பும்ரா பந்து வீசுவது சிறந்த போட்டியாக இருக்கும். அவரை ஹெட் அதிரடியாக எதிர்கொள்ள முயற்சிப்பார். ரோஹித் சர்மா எப்போது வருவார் என்பது தெரியாததால் பும்ரா முதல் இரண்டு போட்டிகளில் கேப்டனாக செயல்படலாம். உலகின் சிறந்த பவுலராக இருக்கும் அவர் இந்தத் தொடரில் பந்து வீசுவதை பார்க்க ஆவலுடன் உள்ளேன்” என்று கூறினார்.

அதே நிகழ்ச்சியில் நேதன் லயன் – ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும் என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். மேலும் பும்ராவை ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் பந்தாட வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பண்ட் – லயன் போட்டி:

“பும்ரா – ஸ்மித் ஆகியோருக்கு இடையேயான போட்டி வேடிக்கையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். சமீபத்திய ஒருநாள் தொடரில் மீண்டும் தன்னுடைய பழைய இடத்தில் விளையாடிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இடத்தில் விளையாடுவதற்கு மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறார். அதே போல ரிஷப் பண்ட் – நேதன் லயன் ஆகியோர் மோதுவது மிகவும் சுவாரசியம் இருந்ததாக இருக்கும்”

இதையும் படிங்க: அவரை தவிர்த்து இந்திய பேட்ஸ்மேன்களால் ஆஸி பவுலர்களிடம் நிக்க முடியாது.. காரணம் இது தான்.. ப்ராட் ஹடின்

“ரிஷப் பண்ட்டை அவர் வெள்ளைக் கோட்டை விட்டு வெளியே வந்து அடிக்க வைக்க முயற்சிக்கிறாரா என்பதை பார்க்க வேண்டும். ஏனெனில் ரிஷப் பண்ட் மிகவும் வேகமாக தடுப்பாட்டத்தில் இருந்து வந்து எந்த பவுலரையும் அட்டாக் செய்து விளையாடக் கூடியவர்” என்று கூறினார். அந்த வகையில் உலகத்தரமான வீரர்கள் மோதும் இந்த தொடர் ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement