உண்மையாகவே விலகிவிட்டாரா – ஜஸ்பிரித் பும்ராவின் காயம் பற்றி கோச் ராகுல் டிராவிட் கொடுத்த அப்டேட் இதோ

Rahul Dravid Rohit Sharma Jasprit Bumrah
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. உலக கோப்பைக்கு முன்பாக பங்கேற்கும் இந்த கடைசி தொடரின் முதல் போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா முதுகு பகுதியில் சந்தித்த காயத்தால் விலகுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. ஆனால் காயம் சோதிக்கப்பட்டதில் அவருக்கு முதுகு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் எஞ்சிய தென் ஆப்பிரிக்க தொடர் மட்டுமல்லாது உலகக் கோப்பையிலிருந்தும் விலகுவதாக செய்திகள் வெளியானது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஏனெனில் கடந்த 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வரும் அவர் பந்து வீச்சு துறையின் முதுகெலும்பாக கருதப்படுகிறார்.

IND Japrit Bumrah

- Advertisement -

அத்துடன் உலக கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள அணியில் இடம் பிடித்துள்ள இதர பவுலர்களான ஹர்ஷல் படேல் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் சமீப காலங்களில் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த நிலையில் துல்லியமாக பந்து வீசி குறைவான ரன்களைக் கொடுத்து யார்கர் பந்துகளால் விக்கெட்டை எடுத்து வெற்றியைப் பெற்றுத் தரக்கூடிய “டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்” என்றழைக்கப்படும் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகியுள்ளது இந்தியாவின் உலகக் கோப்பை கனவையும் தகர்த்ததுள்ளதாக பார்க்கப்படுகிறது.

டிராவிட்டின் அப்டேட்:
இருப்பினும் தென் ஆப்ரிக்க தொடரிலிருந்து விலகிய அவருக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டதாக அறிவித்த பிசிசிஐ இதுவரை உலக கோப்பையிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகுகிறார் என அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை. அதையே சுட்டிக்காட்டிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி ஜஸ்பிரித் பும்ரா இதுவரை உலக கோப்பையிலிருந்து முழுமையாக வெளியேறவில்லை என்றும் அவரது காயத்தை பிசிசிஐ மருத்துவக்குழு சோதித்து வருவதாகவும் சமீபத்தில் தெரிவித்தார். அதனுடைய முழு விவரம் இன்னும் சில நாட்களில் தெரிய வரும் என்பதால் அதுவரை ரசிகர்களும் ஊடகங்களும் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொண்ட கங்குலி காயம் லேசாக இருக்கும் பட்சத்தில் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா பயணிக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Ganguly

இந்நிலையில் பும்ரா இதுவரை அதிகாரபூர்வமாக வெளியேறவில்லை என்று தெரிவிக்கும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருடைய காயம் பற்றி முழுமையான விவரங்கள் வரை காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்றி கௌகாத்தி போட்டிக்கு முன்பாக அவர் பேசியது பின்வருமாறு. “தற்சமயத்தில் ஜஸ்பிரித் பும்ரா தென் ஆப்ரிக்க தொடரிலிருந்து மட்டுமே விலகி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமிக்கு சென்றுள்ளார். அவரது விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரபூர்வ செய்திக்காக காத்திருக்கிறோம்”

- Advertisement -

“ஆனால் தற்சமயத்தில் இந்தத் தொடரிலிருந்து மட்டுமே அவர் விலகியுள்ளார். அடுத்த சில நாட்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் அதிகாரப்பூர்வ தகவல் வந்ததும் உங்களுக்கு நாங்கள் நிச்சயம் தெரிவிப்போம். அதே சமயம் மருத்துவ அறிக்கையில் நாங்கள் இதுவரை ஆழமாக செல்லவில்லை. அதாவது அவரைச் சோதிக்கும் மருத்துவர்கள் நிலைமையை என்னவென்று சொன்னால் தான் எங்களுக்கும் தெரியும்”

Rahul

“அந்த வகையில் எனக்கு அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கும் போது உங்களுக்கு நான் தெளிவாக சொல்வேன். இருப்பினும் அவருக்கு பெரிய காயம் இருக்காது என்றே நான் நம்புகிறேன். அணிக்காக மட்டுமல்லாமல் அவரைப் பொறுத்த வரையிலும் காயம் பெரிதாக இருக்க கூடாது என்றே விரும்புகிறேன். அவர் இருந்தால் அவருக்கும் எங்களுக்கும் எஞ்சிய போட்டிகளில் நல்ல அம்சங்கள் நடைபெறும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: உண்மையாகவே விலகிவிட்டாரா – ஜஸ்பிரித் பும்ராவின் காயம் பற்றி கோச் ராகுல் டிராவிட் கொடுத்த அப்டேட் இதோ

அதாவது பெங்களூருவில் இருக்கும் பும்ராவின் காயத்தை பற்றி தங்களுக்கும் முழுமையாக தெரியவில்லை என்று தெரிவிக்கும் டிராவிட் மருத்துவக்குழு கொடுக்கும் இறுதிக்கட்ட அறிக்கை கிடைத்த பின் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுகிறோம் என்று கூறியுள்ளார். இருப்பினும் கிட்டதட்ட வெளியேறியது உறுதி தான் என்பதை மறைமுகமாக தெரிவிக்கும் அவர் அதிகாரப்பூர்வ அறிக்கை கையில் கிடைத்ததும் அவருக்கான மாற்று வீரரை அறிவிப்பதற்கான வேலையை துவங்க உள்ளதாக சொல்லாமல் சொல்லியுள்ளார். இதிலிருந்து டி20 உலக கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா வெளியேறுவது உறுதியாகியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே வெளி வர வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement