அவங்கல்லாம் இருந்தும் தோனியின் இடத்தை நிரப்ப இன்னும் யாரும் கிடைக்கல – ராகுல் டிராவிட் ஆதங்கம், காரணம் என்ன

Rahul Dravid MS Dhoni
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி 3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்து நிறைய போட்டிகளில் நங்கூரமாக நின்று கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு மிகச்சிறந்த பினிஷராகவும் மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் அசத்தி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர். அதை விட விக்கெட் கீப்பராக கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்வது, திரும்பி பார்க்காமலேயே ஸ்டம்ப்பை அடித்து ரன் அவுட் செய்வது போன்ற பரிணாமங்களை விக்கெட் கீப்பிங்கில் ஏற்படுத்திய அவர் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி நிறைய வெற்றிகளை கற்றுக் கொடுத்தார். அவரது வருகையால் இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமல்லாமல் அதிரடியாகவும் விளையாட வேண்டும் என்ற நிலைமை மாறியது.

dhoni with pant

- Advertisement -

சொல்லப்போனால் இந்திய கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்களை தோனிக்கு முன் பின் என 2 வகையாக பிரிக்கலாம். அந்தளவுக்கு விக்கெட் கீப்பர்களின் அடிப்படை இலக்கணத்தை மாற்றிய அவரால் தான் இன்றைய இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் செய்வது 2வது வேலையாகவும் அந்த இடத்தில் விளையாடுபவர்கள் பேட்டிங்கில் அதிரடியாக ரன்களை குவிப்பது முதல் வேலையாகவும் மாறியுள்ளது. அவருக்குப் பின் ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், இஷான் கிசான், சஞ்சு சாம்சன் போன்ற நிறைய இளம் விக்கெட் கீப்பர்கள் வந்தாலும் அவரது இடத்தை நிரப்ப முடிந்ததா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை.

டிராவிட் ஆதங்கம்:
ஏனெனில் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தினாலும் தோனி போல 3 வகையான கிரிக்கெட்டிலும் இன்னும் அசத்த முடியவில்லை. அதே போலவே இஷான் கிசான், சாம்சன் ஆகியோர் இன்னும் தங்களது இடத்தை நிரந்தரமாக்கும் அளவுக்கு உருவாகவில்லை. ஆனால் அறிமுகமான 2004க்குப்பின் அடுத்த வருடத்திலேயே தோனி 3 வகையான கிரிக்கெட்டிலும் நிரந்தர விக்கெட் கீப்பராக பேட்ஸ்மேனாக அவதரித்தார். இந்நிலையில் என்ன தான் தற்சமயத்தில் நிறைய இளம் விக்கெட் கீப்பர்கள் வந்தாலும் தோனியின் இடத்தை நிரப்பும் அளவுக்கு யாரும் கிடைக்கவில்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ishan kishan 2

இது பற்றி 3வது ஒருநாள் போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேடி வருகிறோம் என்பதில் எந்த கேள்வியும் இல்லை. அனேகமாக தோனிக்கு பின் குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் துரதிஷ்டவசமாக ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர்கள் நமக்கு கிடைக்கவில்லை. அதே சமயம் நிறைய இளம் வீரர்கள் அந்த இடத்திற்கு போட்டி போடுவது நாம் செய்துள்ள அதிர்ஷ்டமாகும். இப்போது அணியில் இருக்கும் இஷான் கிசான், கேஎஸ் பரத் ஆகியோர் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடியுள்ளனர்”

- Advertisement -

“இருப்பினும் பரத் இதுவரை இந்தியாவுக்காக விளையாடவில்லை. இசான் கிசான் கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர்களுடன் ராகுல் இருக்கிறார் சாம்சன் இருக்கிறார் ஆனால் துரதிஷ்டவசமாக ரிசப் பண்ட் காயமடைந்துள்ளார். இந்த அனைவருமே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள். இன்று அணியில் விளையாடுவதற்கு நீங்கள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும்”

Dravid

“குறிப்பாக விக்கெட் கீப்பிங் மட்டும் செய்வதுடன் பேட்டிங்கில் தொடர்ந்து கணிசமான ரன்களை அடித்து வெற்றியில் பங்காற்ற வேண்டும். அதனால் டி 20 கிரிக்கெட்டில் நாங்கள் இப்போது ஜிதேஷ் சர்மாவையும் தேர்வு செய்துள்ளோம். அவர் சயீத் முஷ்டாக் அலி மற்றும் ஐபிஎல் தொடர்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அனைத்து அணிகளைப் போலவே இந்திய அணியிலும் நல்ல தரமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவைப்படுகிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இரட்டைசதம் அடிச்சாச்சுன்னு மெதப்பில் இருக்காதீங்க. கில் மற்றும் இஷான் கிஷனை எச்சரித்த – சுனில் கவாஸ்கர்

அவர் கூறுவது போல 2019இல் தோனி ஓய்வு பெற்றாலும் அதன் பின் எந்த விக்கெட் கீப்பரும் அவரது இடத்தை நிரப்பும் அளவுக்கு அசத்தவில்லை. குறிப்பாக 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைகளை மையமாகக் கொண்ட வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இன்னும் தொடர்ந்து அசத்தும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிடைக்கவில்லை. அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்காகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியையும் மிஞ்சிய ரிஷப் பண்ட்டுக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் அதை இதுவரை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement