72 சிக்ஸர்கள்.. இங்கிலாந்தை நொறுக்கி இந்தியா உலக சாதனை படைக்க ரகசியம் என்ன? டிராவிட் சொன்ன பதில்

Rahul Dravid 4
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை என்ற கணக்கில் வென்ற இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் கடைசியில் 4 – 1 என்ற கணக்கில் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சாதனையும் இந்தியா படைத்தது.

முன்னதாக இந்த தொடரில் டி20 போல அதிரடியாக பேட்டிங் செய்து இந்தியாவை தோற்கடிப்போம் என்று இங்கிலாந்து அணியினர் ஆரம்பத்திலேயே எச்சரித்தனர். ஆனால் வாயில் சொன்னதை செயலில் காட்டத் தவறிய அந்த அணியை அடித்து நொறுக்கிய இந்தியா 5 போட்டிகளில் மொத்தம் 72 சிக்சர்கள் அடித்து பஸ்பால் என்றால் என்ன என்பதை இங்கிலாந்துக்கு காண்பித்தது.

- Advertisement -

டிராவிட்டின் பதில்:
அதன் வாயிலாக உலகிலேயே ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற உலக சாதனையையும் இந்தியா படைத்தது. குறிப்பாக 22 வயதாகும் ஜெய்ஸ்வால் மட்டும் 29 சிக்ஸர்கள் விளாசி ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக சாதனை படைத்தார். இந்நிலையில் இந்த தொடரில் இந்தியா இப்படி அதிக சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்ததன் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன? என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு தன்னுடைய பேட்டிங் வீடியோக்களை தற்போதைய இந்திய வீரர்களுக்கு போட்டுக் காட்டியதாக ராகுல் டிராவிட் நகைச்சுவையாக பதிலளித்தார். அதாவது தம்முடைய பொறுமையான பேட்டிங்கை பார்த்து கடுப்பாகி இந்திய வீரர்கள் இத்தொடரில் அதிரடியானா சிக்சர்கள் அடித்ததாக கலகலப்பாக தெரிவித்த டிராவிட் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நான் என்னுடைய பேட்டிங் வீடியோக்களை மட்டும் அவர்களுக்கு போட்டுக் காட்டினேன்”

- Advertisement -

“அதனாலேயே அவர்கள் தற்போது சிக்ஸஸ் அடிக்கின்றனர். ஆனால் அதைப் பார்த்தது அபாரமானதாக இருந்தது. அது வேறு மட்டத்தில் இருக்கும் விளையாட்டின் ஒரு அம்சமாகும். சிக்சர் அடிப்பதில் இந்தியா உருவாக்கிய மகத்தான வீரரான ரோகித் சர்மாவை நாங்கள் கொண்டுள்ளோம். சிக்ஸர்களை அடிப்பதற்கு தனித்துவமான சக்தி, திறமை, திறன் அவசியமாகிறது”

இதையும் படிங்க: அஷ்வின் பண்ணது சாதாரண விஷயம் இல்ல.. அதுக்கு தைரியம் வேணும்.. இங்கி தொடர் குறித்து – ராகுல் டிராவிட் பாராட்டு

“ஒவ்வொரு முறையும் எங்களுடைய வீரர்கள் அடிக்கும் போது அது மைதானத்திற்கு வெளியே செல்வது போல் தெரிந்தது. இந்த வீரர்களின் ஆட்டத்தைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறினார். அந்த வகையில் இந்த தொடரில் அதிரடியாக விளையாடுவோம் என்று சொன்ன இங்கிலாந்து வெறும் 30 சிக்ஸர்களை இந்தியா 72 சிக்ஸர்களையும் அடித்தது. அதனால் உலகிலேயே 100 சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட முதல் தொடராக 2024 இந்தியா – இங்கிலாந்து தொடர் உலக சாதனையுடன் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement