அஷ்வின் பண்ணது சாதாரண விஷயம் இல்ல.. அதுக்கு தைரியம் வேணும்.. இங்கி தொடர் குறித்து – ராகுல் டிராவிட் பாராட்டு

Dravid-and-Ashwin
- Advertisement -

அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்திய அணியிடம் நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து நாடு திரும்பியது. இந்த போட்டியில் முன்னணி இந்திய வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில் : உண்மையிலேயே சொல்ல வேண்டும் என்றால் இந்த தொடர் மிகவும் அற்புதமாக முடிந்திருக்கிறது. நமது அணி வீரர்களின் நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் முதல் போட்டியில் தோற்ற பின்னர் இந்திய அணி மீண்டு வந்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது. இந்த தொடரில் பல்வேறு இக்கட்டான நிலையை நாம் சந்தித்தோம். ஆனாலும் அந்த தருணங்களில் கூட யாரேனும் ஒருவர் முன்வந்து சிறப்பான செயல்பாட்டை அளித்து நமது அணியை வெற்றிபெற செய்துள்ளனர்.

ஒரு பயிற்சியாளராக இதைவிட என்னால் பெருமை கொள்ள முடியாது. அதேபோன்று விராட் கோலி, முகமது ஷமி, கே.எல் ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் இல்லை என்றாலும் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட படிக்கல், பாட்டிதார், ஆகாஷ் தீப், சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் என ஐந்து வீரர்களுமே சிறப்பாக பங்களிப்பை வழங்கி உள்ளனர்.

- Advertisement -

இந்திய அணியின் தேர்வுக்குழு சரியான வீரர்களை தேர்வு செய்து அணியில் இணைத்துள்ளது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த தொடரில் ஒரு மறக்க முடியாத தருணம் யாதெனில் : அஸ்வின் சென்னைக்கு சென்று மீண்டும் திரும்பி வந்த தருணம் தான். ஏனெனில் கடினமான தருணங்களை கடந்து அவர் மீண்டும் அணியில் விளையாடுவது என்பது சாதாரணமான விடயம் கிடையாது.

இதையும் படிங்க : 105க்கு ஆல் அவுட்.. ஃபைனலில் விதர்பாவை விளாசும் ரகானே – முஷீர் கான்.. எழுந்து நின்று கைதட்டிய கவாஸ்கர்

அப்படி ஒரு சூழலில் இருந்து மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று அவர் நினைத்த மன தைரியத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சிறப்பான செயல்பாடுகள் வரும் போகும் ஆனால் போட்டிக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு அர்ப்பணிப்புடன் பெரிய அழுத்தத்திலிருந்து மீண்டு வருவது கடினம் அதனை அஸ்வின் செய்து காண்பித்திருக்கிறார் என டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement