105க்கு ஆல் அவுட்.. ஃபைனலில் விதர்பாவை விளாசும் ரகானே – முஷீர் கான்.. எழுந்து நின்று கைதட்டிய கவாஸ்கர்

Rahane and Musheer Khan
- Advertisement -

இந்தியாவின் பழமை வாய்ந்த உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சிக் கோப்பை 2024 சீசன் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட மும்பை மற்றும் விதர்பா அணிகள் மோதிய மாபெரும் இறுதிப்போட்டி மார்ச் 10ஆம் தேதி துவங்கியது. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை போராடி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக துவக்க வீரர்கள் பிரிதிவி ஷா 46, பூபேன் லால்வாணி 37 ரன்கள் அடித்து மும்பைக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனாலும் மிடில் ஆர்டரில் முஷீர் கான் 6, கேப்டன் ரகானே 7, ஸ்ரேயாஸ் ஐயர் 7 ஹர்திக் தாமோர் 5 ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கினார்.

- Advertisement -

பாராட்டிய கவாஸ்கர்:
அதனால் 111/5 என சரிந்த மும்பை 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட போது லோயர் மிடில் ஆர்டரில் வெளுத்து வாங்கிய சர்துள் தாக்கூர் 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 37 பந்துகளில் 50 அரை சதமடித்து 75 (69) ரன்கள் குவித்து காப்பாற்றினார். விதர்பா சார்பில் அதிகபட்சமாக யாஷ் தாகூர் 3, ஹர்ஷ் துபே 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதன் பின் களமிறங்கிய விதர்பா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் மும்பையின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 27, அதர்வா டைட் 23 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக சாம்ஸ் முலானி, தவால் குல்கர்னி, தானுஷ் கோட்டியான் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

அதைத் தொடர் 119 ரன்கள் வலுவான முன்னிலையுடன் தங்களுடைய 2வது இன்னிங்ஸை துவங்கிய மும்பைக்கு பிரிதிவி ஷா 11, பூபேன் லால்வானி 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த முஷீர் கான் மற்றும் கேப்டன் ரகானே ஆகியோர் நிதானமாக விளையாடி விதர்பாவுக்கு சவாலை கொடுத்து அரை சதமடித்தனர். அதனால் இரண்டாவது நாள் முடிவில் 141/2 ரன்கள் எடுத்துள்ள மும்பை 260 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நியூஸிலாந்தை சாய்ச்சுட்டு சந்தோஷப்படாதீங்க.. அந்த இந்திய வீரர்கள் சாய்க்க வராங்க.. ஆஸியை எச்சரித்த ஃபெய்ன்

களத்தில் இதுவரை 3வது விக்கெட்டுக்கு 107* ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு விதர்பாவை விளாசி வரும் முஷீர் கான் 51*, கேப்டன் ரகானே 58* ரன்களுடன் உள்ளனர். அப்படி தன்னுடைய மாநில அணிக்கு மற்றுமொரு ரஞ்சிக்கோப்பையை கிட்டத்தட்ட உறுதி செய்த ரகானே – முஷீர் கான் ஆட்டத்தை வான்கடே மைதானத்திலிருந்து போட்டியை பார்த்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் நாளின் முடிவில் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தார்.

Advertisement