நியூஸிலாந்தை சாய்ச்சுட்டு சந்தோஷப்படாதீங்க.. அந்த இந்திய வீரர்கள் சாய்க்க வராங்க.. ஆஸியை எச்சரித்த ஃபெய்ன்

Tim Paine
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. அதன் வாயிலாக கடந்த 31 வருடங்களாக நியூசிலாந்து மண்ணில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இருந்து வரும் மிகப்பெரிய சாதனையை தக்க வைத்துக் கொண்ட ஆஸ்திரேலியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

இருப்பினும் இந்த தொடரில் ஓய்வு பெற்ற டேவிட் வார்னருக்கு பதிலாக துவக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், உஸ்மானா கவாஜா போன்ற பேட்ஸ்மேன்கள் சுமாராகவே செயல்பட்டனர். இந்நிலையில் 2023 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை தோற்கடிக்க முடியாத ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் கத்துக்குட்டியாக மாறியுள்ள வெஸ்ட் இண்டீஸ் எதிராக சமீபத்தில் 1 – 1 (2) என்ற கணக்கில் தொடரை சமன் மட்டுமே செய்ததாக முன்னாள் கேப்டன் டிம் ஃபெய்ன் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்தியா வராங்க:
அப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது நியூசிலாந்தை 2 – 0 என்ற கணக்கிலும் தோற்கடித்த ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பலமாக இல்லை என்று அவர் கூறியுள்ளார். எனவே வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் 2024 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் பும்ரா, ஷமி, அஸ்வின், சிராஜ், ஜடேஜா போன்ற தரமான இந்திய பவுலர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சொந்த மண்ணில் மிகப்பெரிய சவாலை கொடுப்பார்கள் என்றும் டிம் பெய்ன் எச்சரித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து தொடரில் வென்றும் நான் ஏமாற்றமாகவே இருக்கிறேன். இந்தத் தொடரில் நியூசிலாந்தை விட நாம் நல்ல அணியாக இருந்தோம். ஆனால் இதே ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தொடரை சமன் மட்டுமே செய்தது. எனவே போதுமான ரன்கள் அடிக்காதது எப்போதும் உங்களின் வெற்றிக்கு போதுமானதாக இருக்காது”

- Advertisement -

“உங்களுடைய கேப்டன் மற்றும் பயிற்சியாளர் எங்களின் பேட்ஸ்மேன்களை பற்றி எந்தக் கவலையும் இல்லை என்று சொல்லலாம். இருப்பினும் கடந்த 3 – 4 போட்டிகளில் நம்முடைய பேட்டிங்கில் நிறைய கேள்வி எழுந்துள்ளது. அதற்கான விடையை சீக்கிரம் கண்டறிய வேண்டும். ஏனெனில் இங்கே வேண்டுமானால் நாம் நியூசிலாந்தை தோற்கடித்திருக்கலாம். ஆனால் வெஸ்ட் இண்டீஸ்க்கு ஒரு போட்டியில் நாம் தோற்றோம். இங்கிலாந்தை நம்மால் தோற்கடிக்க முடியவில்லை”

இதையும் படிங்க: மறுபடியும் ஏமாற விரும்பல.. இப்போவே இந்தியாவிடம் சொல்லிடுங்க.. ஐசிசி’யிடம் மல்லுக்கட்டும் புதிய பாக் வாரிய தலைவர்

“இந்த சூழ்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போன்ற பவுலர்களை வைத்து இந்தியா நமக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தப் போகிறது” என்று கூறினார். முன்னதாக 2018/19, 2020/20 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா தோற்கடித்து சரித்திரம் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement