மறுபடியும் ஏமாற விரும்பல.. இப்போவே இந்தியாவிடம் சொல்லிடுங்க.. ஐசிசி’யிடம் மல்லுக்கட்டும் புதிய பாக் வாரிய தலைவர்

Moshin Naqvi
- Advertisement -

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவதை முற்றிலும் நிறுத்தி விட்டன. அதனால் ஆசிய மற்றும் உலகக் கோப்பைகளில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றது. ஆனால் அந்தப் போட்டிகளிலுமே ஒரு நாடுகளும் பல கருத்து வேறுபாடுகளுக்கு பின்பே மோதி வருகின்றன.

குறிப்பாக கடந்த 2023 ஆசியக் கோப்பை முழுவதுமாக பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அந்நாட்டில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி விளையாடாது என்று பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கவுன்சில் தலைவர் ஜெய் ஷா திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதனால் பாகிஸ்தான் விளையாடிய லீக் மற்றும் சூப்பர் 4 போட்டிகள் மட்டும் அந்நாட்டில் நடைபெற்றது.

- Advertisement -

இப்போதே பேச்சுவார்த்தை:
இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளும் அண்டை நாடான இலங்கையில் நடைபெற்ற முடிந்தது. இந்நிலையில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மண்ணில் அடுத்த வருடம் – பிப்ரவரி மார்ச்சில் நடைபெற உள்ளது. பல வருடத்திற்குப் பின் ஒரு ஐசிசி தொடரை தங்களுடைய சொந்த மண்ணில் நடத்தும் பாகிஸ்தான் வாரியம் அதை வெற்றிகரமாக நடத்துவதற்கான வேலைகளை இப்போதே துவங்கியுள்ளது.

அந்த வரிசையில் பாகிஸ்தான் வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மோசின் நக்வி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா தங்களுடைய நாட்டுக்கு வந்து விளையாட வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக 2023 ஆசியக் கோப்பையை போல் இந்தியாவுக்காக 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் ஃஹைபிரிட் மாடலில் நடத்த முடியாது என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக தெரிய வருகிறது.

- Advertisement -

எனவே தங்கள் நாட்டுக்கு வந்து இந்தியா விளையாடுவதை உறுதி செய்வதற்காக ஐசிசி நிர்வாகிகளுடன் விரைவில் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதுபற்றி பிடிஐ இணையத்தில் பெயர் வெளியிட விரும்பாத பாகிஸ்தான் வாரிய நிர்வாகி பேசியது பின்வருமாறு. “இந்தியா தங்களுடைய அணியை பாகிஸ்தானுக்கு விளையாட அனுப்புமா என்பதே பிசிபிக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனையாகும். கடந்த முறை ஆசியக் கோப்பையில் நடந்த பிரச்சனையை இம்முறையும் நாங்கள் எதிர்கொள்ள விரும்பவில்லை”

இதையும் படிங்க: சேப்பாக்கத்தில் மேக்ஸ்வெல் அந்த சிஎஸ்கே பவுலரை ஈஸியா சிக்ஸர் அடிக்க முடியாது.. எச்சரித்த ஹர்பஜன்

“ஏனெனில் இது ஐசிசி தொடர். கடந்த வருடம் இந்தியாவில் நடந்த ஐசிசி உலகக் கோப்பைக்கு விளையாட பாகிஸ்தான் சென்றது. எனவே இம்முறை பாகிஸ்தானுக்கு சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடுவதற்கு இந்தியா தங்களுடைய அணியை அனுப்ப வேண்டும் என்று ஐசிசி’யிடம் நக்வி பேசி உறுதியை பெற உள்ளார். அதே சமயம் பாகிஸ்தானில் புதிய அரசாங்கம் வந்துள்ளதால் தற்போது பாதுகாப்புக்கு எந்த பிரச்சனையுமில்லை என்று பிசிசிஐ’க்கு உறுதிக் கொடுக்க நக்வி தயாராக உள்ளார்” என்று கூறினார்.

Advertisement