சேப்பாக்கத்தில் மேக்ஸ்வெல் அந்த சிஎஸ்கே பவுலரை ஈஸியா சிக்ஸர் அடிக்க முடியாது.. எச்சரித்த ஹர்பஜன்

harbhajan singh 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வரும் மார்ச் 22ஆம் தேதி துவங்குகிறது. வரலாற்றில் 17வது முறையாக நடைபெற உள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் இரு அணிகளிலும் அதிரடியாக விளையாடக்கூடிய உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் நிறைந்திருக்கின்றனர். இருப்பினும் அதில் விராட் கோலி, டு பிளேஸிஸ், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் அடங்கிய பெங்களூரு அணியின் டாப் ஆர்டர் சென்னையை விட அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்களை கொண்டிருப்பதால் வலுவாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

- Advertisement -

எச்சரித்த ஹர்பஜன்:
குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியின் பிடியில் சிக்கிய ஆஸ்திரேலியாவை காயத்துடன் ஒற்றைக் காலில் நின்று அடித்து நொறுக்கிய மேக்ஸ்வெல் மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். மேலும் கடந்த மாதம் நடந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடந்த டி20 தொடரிலும் சதமடித்த அவர் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் சென்னைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியிலேயே அமர்க்களமாக விளையாடுவார் என்று பெங்களூரு ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் தொட்டாலே சிக்ஸர் பறக்கும் சின்னசாமி போன்ற மைதானங்களை போல் சென்னை சேப்பாக்கத்தில் கிளன் மேக்ஸ்வெல் சிக்சர்கள் அடிக்க முடியாது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவை எதிர்கொண்டு மேக்ஸ்வெல் சிக்ஸர்கள் அடிப்பது மிகவும் கடினம் என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“களமிறங்கியதும் சிக்ஸர்கள் அடிப்பது யாருக்குமே பெரிய வேலையாக இருக்கும். பொதுவாக நீங்கள் சிங்கிள் மற்றும் டபுள் எடுத்து உங்களுக்கான நேரத்தை கொடுப்பீர்கள். ஒருவேளை நீங்கள் 10 பந்துகளை எதிர்க்கொள்ளாமல் நேரடியாக பவுண்டரிகள் அடித்தால் உங்களை நீங்களே ஆபத்தான இடத்தில் போடுகிறீர்கள் என்று அர்த்தம். அது போன்ற சமயத்தில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அவுட்டாகலாம். எனவே முதல் போட்டியில் சேப்பாக்கம் பிட்ச்சில் மேக்ஸ்வெலை விட ரவீந்திர ஜடேஜா முன்னிலையில் இருப்பதாக நான் கருதுகிறேன்”

இதையும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் போதும்.. இனிமே சி.எஸ்.கே அணிக்காக இதை செய்யுங்க – அம்பத்தி ராயுடு ஆசை

ஏனெனில் அங்கே பந்து சற்று நின்று வரும். கொஞ்சம் சைட் ஸ்பின்னும் இருக்கும். அதே சமயம் மேக்ஸ்வெல் தன்னுடைய நாளில் யாராலும் தடுக்க முடியாதவராக செயல்படுவார். ஆனால் சேப்பாக்கம் பிட்ச்சில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சிக்ஸர்கள் அடிப்பது யாருக்கும் கடினமாக இருக்கும். இருப்பினும் அது போன்ற வேலையை மேக்ஸ்வெல் மட்டுமே செய்யக்கூடியவர். எனவே இந்த போட்டியில் யார் வெல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார்.

Advertisement