மும்பை இந்தியன்ஸ் போதும்.. இனிமே சி.எஸ்.கே அணிக்காக இதை செய்யுங்க – அம்பத்தி ராயுடு ஆசை

Rayudu-and-Rohit
- Advertisement -

கடந்த ஆண்டு குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற சிஎஸ்கே அணியானது ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது. அதனைத் தொடர்ந்து நடப்பு சாம்பியனாக 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுகிறது.

தற்போது 42 வயதை எட்டியுள்ள சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனிக்கு இது கடைசி சீசனாக அமையும் என்பதனால் இம்முறையும் கோப்பையை வென்று சாம்பியன் கேப்டனாகவே தோனியை வழி அனுப்ப சிஎஸ்கே அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

மேலும் இந்த சீசனுக்கு அடுத்து அவர் சி.எஸ்.கே-வில் புதிய பொறுப்பை ஏற்க இருப்பதாகவும் தெரிகிறது. அப்படி ஒருவேளை தோனி சென்னை அணியில் இருந்து வெளியேறி ஓய்வை அறிவித்தால் அடுத்த கேப்டன் யார்? என்கிற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்துள்ளது.

ஏற்கனவே தோனிக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா கேப்டனாக அறிவிக்கப்பட்டு அவர் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் மீண்டும் தோனி கேப்டன் பதவியேற்றார். இதன் காரணமாக சென்னை அணியின் அடுத்த கேப்டன் குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் சி.எஸ்.கே வீரருமான அம்பத்தி ராயுடு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரோகித் சர்மா சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : எதிர்காலத்தில் ரோகித் சர்மா சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் நீண்ட காலம் விளையாடிவிட்டார்.

இதையும் படிங்க : அது 100% நடக்கும்.. ரிஷப் பண்ட் கீப்பிங் செய்ய ஆரம்பிச்சுட்டாரு.. ரிக்கி பாண்டிங் சொன்ன நற்செய்தி

சிஎஸ்கே அணிக்காக அவர் இணைந்து அதேபோல வெற்றிகளை குவித்தால் பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியும் அவரை நோக்கி இருக்கும் அதை பெறும் உரிமையை அவர் பெற்றுள்ளார். மேலும் சென்னை அணியை வழிநடத்தும் விருப்பம் இருக்கிறதா? இல்லையா? என்பது அவரது முடிவு என ராயுடு தெரிவித்துள்ளார்.

Advertisement