சாதனை தான் தெரியும், ஆனா அதுக்கு பின்னாடி இருக்கும் அவரோட உழைப்பு உங்களுக்கு தெரியாது – நட்சத்திர வீரரை பாராட்டிய டிராவிட்

Rahul-Dravid
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி ஜூலை 20ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது. அந்த போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகளில் விளையாடிய 4வது இந்திய வீரர் என்ற மாபெரும் மைல்கல் சாதனையை படைக்க உள்ளார்.

- Advertisement -

கடந்த 2008 அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு ஜாம்பவான் சச்சினுக்கு பின் 2013 முதல் ரன் மெஷினாக உலகின் அனைத்து இடங்களிலும் அனைத்து விதமான டாப் பவுலர்களையும் எதிர்கொண்டு 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். குறிப்பாக இந்த உலகில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் மட்டும் அசத்தும் நிலையில் மட்டும் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதே அவருடைய ஸ்பெஷலாகும்.

டிராவிட் பாராட்டு:
அத்துடன் 2016 – 2021 வரை இந்தியாவை தரவரிசையில் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்து வெற்றிகரமான ஆசிய கேப்டன் என்ற சாதனையும் படைத்துள்ள அவர் இத்தனை வருடங்களாக ஃபார்ம் மற்றும் காயங்களை கடந்து சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு பின் 500 போட்டிகளில் 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார். அதனால் நிறைய ரசிகர்கள் வாழ்த்தும் நிலையில் அனைவரும் புத்தகத்தில் இருக்கும் இந்த சாதனையை தான் பார்ப்பார்கள் என்று தெரிவிக்கும் ராகுல் டிராவிட் அதற்குப் பின் விராட் கோலி போட்டுள்ள உழைப்பு வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது என பாராட்டியுள்ளார்.

Rahul Dravid Virat Kohli

இது பற்றி 2வது போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “இது அவருடைய 500வது போட்டி என்பது எனக்கு தெரியாது. ஏனனில் இது போன்ற புள்ளி விவரங்களை நான் எப்போதும் பின்பற்றுவதில்லை. இருப்பினும் அதைக் கேட்பது சிறப்பாக இருக்கிறது. இந்த மகத்தான சாதனை படைத்துள்ள அவர் இந்திய அணியில் இருக்கும் பலவீரர்களுக்கும் இந்தியாவில் இருக்கும் பல இளம் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கும் உத்வேகமாக இருக்கிறார். அவருடைய தரம் பற்றி புத்தகத்தில் இருக்கும் இந்த சாதனைகள் பேசுகின்றன”

- Advertisement -

“இருப்பினும் என்னைப் பொறுத்த வரை யாரும் பார்க்காத போது திரைக்குப் பின்னால் அவர் செய்யும் முயற்சி மற்றும் உழைப்பை நான் நேரில் பார்ப்பது சிறப்பாக இருக்கிறது. அவர் 500 போட்டிகளில் விளையாடியதிலேயே அந்த உழைப்பு பிரதிபலிக்கிறது. சொல்லப்போனால் இந்த சாதனை அவ்வளவு எளிதில் உங்களுக்கு வந்து விடாது. ஏனெனில் அதற்கு பின்னே நீங்கள் நிறைய கடினமான உழைப்பை போட்டு உங்களுடைய கேரியர் முழுவதும் ஏதோ ஒன்றை தியாகம் செய்து தொடர்ந்து விளையாட வேண்டும்”

Dravid

இதையும் படிங்க:ஆசிய கோப்பை 2023 : தோற்றாலும் பாக் முதலிடம் இந்தியா 2வது இடம் தான், இப்போதே வெளியான அறிவிப்பு – இதை பாத்தீங்களா?

“அப்படிப்பட்ட அந்த அம்சங்களை அவர் செய்வதை பயிற்சியாளராக பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஏனெனில் அதை பல இளம் வீரர்கள் உத்வேகமாக எடுத்து வளர துவங்குவார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஆரம்ப காலங்களில் சற்று உடல் பருமனுடன் இருந்த விராட் கோலி நாளடைவில் உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழும் அளவுக்கு ஃபிட்னஸ் கடைபிடித்து வளர்ந்து வரும் காலத்திற்கேற்ப தம்முடைய பேட்டிங் டெக்னிக்கிலும் கடினமான பயிற்சிகளை எடுத்து முன்னேற்றத்தை செய்து வருகிறார். அதனாலேயே 15 வருடங்கள் என்ற நீண்ட காலத்தை கடந்து தற்போது 500 போட்டிகளில் விளையாடும் வீரராக அவர் சாதனை படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement