பேட்டை இங்க புடி. அப்போதான் ரன் வரும். இல்லனா அவுட் ஆயிடுவ – தடுமாறும் கே.எல் ராகுலுக்கு கோச் குடுத்த டிரில்

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறியது அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் சமீப காலமாகவே தனது பேட்டிங்கில் தடுமாறி வரும் அவர் இந்த பங்களாதேஷ் தொடரிலும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருவதால் அவர் குறித்த சர்ச்சையான பேச்சுகள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் எழுந்து வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் முதல் போட்டியில் தான் செய்த தவறுகளை சரி செய்து இரண்டாவது போட்டியின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பும் கே.எல் ராகுல் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிடம் பிரத்தியேக பயிற்சி எடுத்துக் கொண்டார். அந்த சமயத்தில் மைதானத்தில் இருந்த கே.எல் ராகுலுக்கு டிராவிட் பேட்டிங் பயிற்சி அளிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பேட்டின் கிரிப்பை எந்த இடத்தில் பிடிப்பது? எந்த உயரம்வரை பேட்டை உயர்த்தி நிற்க வேண்டும்? பந்து வரும் திசையை எவ்வாறு கணிக்க வேண்டும்? என்பது போன்ற பல்வேறு முக்கிய குறிப்புகளை டிராவிட் வழங்கினார். மேலும் ராகுலின் தடுமாற்றம் எதனால் வருகிறது? என்பதை உற்று நோக்கி அந்த விடயங்களையும் டிராவிட் சுட்டிக்காட்டி உள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியின் துவக்க வீரருக்கான போட்டியில் பல்வேறு வீரர்களும் வரிசை கட்டி நிற்பதால் தனது இடத்தை இழக்கக்கூடாது என்ற உத்வேகத்தில் கே.எல் ராகுல் இரண்டாவது போட்டியில் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் களமிறங்க உள்ளார். ஒருவேளை இப்படியே இன்னும் சில போட்டிகள் ராகுல் சொதப்பினால் நிச்சயம் டெஸ்ட் அணியில் இருந்து அவர் வெளியேற்றப்படவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவை தொடர்ந்து மேலும் ஒரு வீரர் 2 ஆவது டெஸ்டில் இருந்து விலகல் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

இப்படி இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை பயிற்சியாளரான டிராவிட் கேப்டன் கே.எல் ராகுலுக்கு அளித்த இந்த பிரத்தேக பயிற்சி குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement